தன்மதிப்பீடு : விடைகள் - I

9.
தீண்டாமை என்றால் என்ன? இதைக் கவிஞர் எவ்வாறு பாடுகிறார்?

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உருவாக்குவதும், மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதும் தீண்டாமைக் கொள்கையாகும். இதைக் கவிஞர்,

தீண்டாமை போவதென்றால் தின்பதும் உண்பதல்ல
தீண்டாமை தீர்வதென்றால் தீண்டியே ஆவதல்ல
தீண்டாமை விலக்கலென்றால் திருமணம் புரிவதல்ல
தீண்டாதது, என்றோர் ஜாதி இல்லையெனத் தெளிவதேயாம்

எனப் பாடுகிறார்.