தன்மதிப்பீடு : விடைகள் - II

2) நாமக்கல் கவிஞர் பற்றி நீவிர் அறிந்தவற்றைச் சுருக்கித் தருக.

  • நாமக்கல் கவிஞர் எளிய கவிஞர்.
  • ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர்.
  • கவிதை உலகில் முத்திரை பதித்தவர்.
  • அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர்.
  • ஓவியம் வரைவதில் சிறந்தவர்.
  • காந்தியக் கொள்கையாளர்.
  • தேசியம் போற்றியவர்.
  • விடுதலை வேட்கையாளர்.
  • தமிழ்ப்பற்றாளர்; தமிழன் என்னும் உணர்வுடையவர்.
  • சமூகச்சிந்தனையாளர்.
  • பெண்ணின் பெருமை பேசியவர்.