2.0 பாட முன்னுரை

பாரதிதாசன் வழியில் தமிழ்க் கவிஞர் பரம்பரை ஒன்று வந்தது. இதன் மூத்த கவிஞர்களுள் ஒருவர் முடியரசன். இவருடைய கவிதைகளிலும் மொழிப்பற்று, இனஉணர்வு, காதல், இயற்கை ஈடுபாடு, சமுதாயச் சீர்திருத்தம், பகுத்தறிவு வாதம் ஆகியவை பாடுபொருளாக உள்ளன. இந்த உள்ளடக்கத்தைக் கொண்ட கவிதைகளைப் பாரதிதாசனைப் போன்றே உணர்ச்சித் துடிப்புள்ள வளமான தமிழ் நடையில் இவர் எழுதினார். முடியரசனின் கவிதைகளைப் பற்றியும், அவற்றின் சிறப்பு இயல்புகள் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப் பட்டுள்ளது.