இக்காலத் தமிழ்க் கவிஞர்களுள் சிறந்த புதுக்கவிஞர்
 அப்துல் ரகுமான். புதுமையும், 
 இனிமையும், செழுமையும்
 இயல்பாய் அமைந்தவை இவரது 
 கவிதைகள். இதனால்
 படிப்பவர் நெஞ்சங்களை எளிதில் 
 கவர்கின்றன. கவிதை
 படிக்கும் ஆர்வத்தையும், 
 படைக்கும்  ஆற்றலையும்
 தூண்டுகின்றன. புகழ்பெற்ற வார, 
 திங்கள்  இதழ்களிலும்,
 தொலைக்காட்சியிலும் இவரது கவிதைகள் வெளி 
 வருகின்றன.
 தனித்தன்மை வாய்ந்த இவரது படைப்புத் திறன் 
 பற்றியும்,
 கவிதைகளின் நலம் பற்றியும் இப்பாடத்தில் நாம் காணலாம்.  |