இந்த நூலை எழுதியவர் ஒட்டக்கூத்தர்.
இவரது இயற்பெயர் கூத்தன்.
இவர் விக்கிரம சோழனைப் பற்றி ‘விக்கிரம சோழன் உலா’
என்ற ஓர் உலா இலக்கியத்தைப் பாடியுள்ளார். அவ்வரசன் அதிலிருந்து ஒரு பாடலை
எடுத்துக் கூறி ‘அதை ஒட்டி ஒரு பாடல் பாடுக’ என்று கேட்க இவர் ஒட்டிப் பாடியதால்
இவருக்கு ‘ஒட்டக்கூத்தர்’ என்ற பெயர் வந்தது என்று கூறுகிறார்கள். கவிராட்சசன்,
கவிச்சக்கரவர்த்தி, கௌடப்புலவர் முதலிய பல சிறப்புப்
பட்டங்கள் ஒட்டக்கூத்தருக்கு உண்டு.
இவர் சோழநாட்டில் உள்ள மலரி என்ற ஊரில் பிறந்தவர்.
இவர் இந்த நூலில் சீர்காழி என்ற ஊரைப் பற்றியும் அதில் உள்ள சட்டைநாதரையும்
உமாபாகரையும், அவ்வூரில் பிறந்த திருஞான சம்பந்தரையும் சிறப்பித்துப் பாடுகிறார்.
|