தன்மதிப்பீடு : விடைகள் - I

1) உலா இலக்கியம் எதைப் பற்றிப் பாடுகிறது?

உலா என்னும் சிற்றிலக்கியம் பாட்டுடைத்தலைவன் உலா வருவதையும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழுவகைப் பருவ மகளிர் அவனைக் கண்டு காதல் கொண்டு மயங்கி நிற்பதையும் பற்றிப் பாடுகிறது.