பாடம் 1
P10411 காப்பியத்தின் இலக்கணம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
காப்பியம் என்னும் சொல்லின் பொருளையும், காவியம் அல்லது காப்பியம் என்னும் தொடர்நிலைச் செய்யுள் பற்றிய செய்திகளையும் இப்பாடம் தெரிவிக்கின்றது. தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணம் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் பிற நூல்கள் கூறும் செய்திகளும் தரப்பட்டுள்ளன. காப்பியப் பண்பான பாவிகம் பற்றிய செய்திகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. காப்பியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன. பண்டைக் காலம்முதல், இக்காலம் வரையிலுள்ள காப்பியங்கள் குறித்த பாகுபாடும் இப்பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடத்தில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் குறித்த செய்திகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
![]() ![]() ![]() ![]()
|