2.0 பாட முன்னுரை

பழந்தமிழில் நூல்கள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டன. தொடர்நிலைச் செய்யுள் வடிவில் செய்யப்பட்டது காப்பியம் எனப்பட்டது. தமிழ் மொழியில் ஐந்து பெருங்காப்பியங்களும் ஐந்து சிறு காப்பியங்களும் உள்ளன. இவை தவிர வேறு சில காப்பியங்களும் உள்ளன.

ஐம்பெருங் காப்பியங்களுள் முதல் பெருங்காப்பியமாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம் ஆகும். அதில் ஒரு சிறுபகுதி வழக்குரை காதை என்பது. இந்தப் பகுதி மூலம் காப்பியத் தலைவி கண்ணகி, தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என நிறுவியதையும் அதன்வழி முப்பெரும் உண்மைகளுள் இரண்டு உணர்த்தப்படுவதையும் இந்தப் பாடத்தில் காணலாம்.