ஐம்பெருங் காப்பியங்களில்
ஒன்று சிலப்பதிகாரம். அதில் ஒரு சிறு பகுதியான வழக்குரை காதை என்ன சொல்கிறது
என்பதை இப்பாடம் விளக்குகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
சிலப்பதிகாரக் காலத்திய அரசாட்சி முறை குறித்து அறியலாம். வழக்கு விசாரிக்கும்
விதம் குறித்து அறியலாம். அரச நீதி
காக்கப்படும் முறையை அறியலாம். அறத்தின்
வலிமை உணர்த்தப்படுவதை அறியலாம்.