4.0 பாட முன்னுரை
தமிழ் மொழிக்கு வளமையும், பெருமையும் சேர்க்கும் இலக்கிய வடிவங்களுள் ஒன்றாகத் திகழ்வது காப்பியமாகும். சங்கம் மருவிய காலத்தில் தொடங்கி, இடைக்காலத்தில் மிகுதியாகப் படைக்கப்பட்ட பெருமை உடையது காப்பியமாகும். ஐம்பெருங் காப்பியங்களுள் சீவகசிந்தாமணியும் ஒன்று. இந்நூலின்கண் எட்டாவது இலம்பகமாக விமலையார் இலம்பகம் விளங்குகின்றது. இப்பகுதியில் காப்பிய நாயகனான சீவகனின் காதலும், வீரமும் வெளிப்படுகின்றன. மேலும் இந்தப் பாடம் விமலை பந்தாடும் திறன், அவள் சீவகனை மணந்து கொள்ளுதல் ஆகிய செய்திகளைத் தொகுத்துக் கூறுகிறது. |