5.0 பாட முன்னுரை
புலவர்களது கவித்திறனின் பேரெல்லையைக் காட்டும் இலக்கிய வகைகளில் ஒன்று காப்பியமாகும். தமிழில் காப்பியம் சங்கம் மருவிய காலத்தே தோன்றிய சிறப்பினையுடையது. இடைக்காலத்தில் பரவலாகக் காப்பியங்கள் தோன்றலாயின. காப்பியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுவது கம்பராமாயணம் ஆகும். கம்பராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டாவது காண்டம் அயோத்தியா காண்டம். அதன் ஒரு பகுதியாகக் கங்கைப் படலம் விளங்குகிறது. அப்படலத்தில் காப்பிய நாயகனான இராமனின் தலைமைப் பண்பு வெளிப்படுகிறது. அதனையும் குகன் இராமன் மீது கொண்டிருந்த அன்பையும் பக்தியையும் இப்பாடத்தின் மூலமாக அறியலாம். |