சிறந்த தமிழ்க் காப்பியங்களுள்
ஒன்று பெரிய புராணம்
இந்நூலில் இலைமலிந்த சருக்கத்தில் பத்தாவது உட்பிரிவு
கண்ணப்ப நாயனார் புராணம். இப்பகுதி என்ன சொல்கிறது
என்பதை இப்பாடம் விளக்குகின்றது.
திண்ணனார், குடுமித் தேவர் மீது கொண்டிருந்த
பக்தி
(மெய்யன்பு) புலப்படுத்தப்படுகின்றது.
திண்ணனார், சிவகோசரியார் ஆகிய இருவரின் வழிபாட்டு நிலைகளில்
சடங்குகளை விட உணர்வே உயர்ந்தது என்பதனை இப்பாடம்
விளக்குகின்றது.
இறைவனுக்கே, தம் கண்ணைப்
பிடுங்கி அப்பியதால்
திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்ட
சிறப்பு
இப்பாடத்தின் வழி தெரிவிக்கப் பெறுகின்றது.
தனி மனித வாழ்வுக்கும், சமுதாய வாழ்வுக்கும்
அன்பே
முதன்மையானதும் சிறந்ததும் ஆகும் என்பதனை இப்பகுதி
உணர்த்துகின்றது.
புராணத்தில் இடம் பெறும்
திண்ணனாரின் கண்தானச்
செயல், இற்றைக்கால அறிவியல் வழிப்பட்ட கண்தானங்களுக்கு
முன்னோடியாகவும் முற்போக்குச் சிந்தனை உடையதாகவும்
திகழ்வதை இப்பாடத்தின் வழி அறியலாம்.
ஆகம நெறியினும், அன்பு நெறியே சிறந்தது என்பதனை இப்பாடம்
உணர்த்துகின்றது.
|