|  
  
  6.6 தொகுப்புரை  
  கவியரசு கண்ணதாசன் 
 
 பல வரலாற்றுக், குறிப்புகளைக் கொண்டு,
 1954-இல் திருச்சிச் சிறைச்சாலையில் படைத்த ஒரு குறுங்காவியம்
 மாங்கனி. பல தலை முறைகளுக்கு முன்னால் இருந்த மக்களின்
 உள்ளங்களில் பதிந்த வரலாற்று நிகழ்வுகளைக் 
 கவிஞர்
 தம்முடைய படைப்புக்கு ஆதார மாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சி
 காதலின் மாண்பினை விளக்கும் கதையாகிவிட்டதால் சிறந்து
 விளங்குகின்றது.  
  கவிதைகள் வெறும் 
 பொழுது போக்கிற்காக அமையாமல்
 வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவே என்று 
  மாங்கனி
 உணர்த்துகிறது. பழந்தமிழ்க் காவியங்களில் 
 உள்ள
 கதாபாத்திரங்களை இன்றைய சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு
 படைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.  
  தமிழ்மொழியின் 
 மேன்மையைச் சொல்லல், அழகியல்
 உணர்வுகளின் வெளிப்பாடு, காதல், கற்பு இவற்றைப் பற்றிய
 உயர்வு. நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு என  மாங்கனி
 பல பரிமாணங்களைக் கொண்டதாகப் புனையப்பட்டுள்ளது.  
  
 
  
 | 
    தன் 
 மதிப்பீடு : வினாக்கள் - II  | 
  
  
 |  
  1. 
  
  
  | 
 
   மாங்கனியின் 
 ஆடல் அழகினைக் கவிஞர் எவ்வாறு
 வெளிப்படுத்துகிறார்?   | 
  
 
  | 
  
  
 |  
  2. 
  
  
  | 
 
   காதல் 
  
 பற்றிய கவிஞர்  கண்ணதாசனின்
 கருத்துகளுக்குச் சான்று தருக.  | 
  
 
  | 
  
  
 |  
  3. 
  
  
  | 
 
   தமிழ்ப் 
 பெண்களின் கற்பின் சிறப்பினை மாங்கனி
 மூலமாக எவ்வாறு கவிஞர் போற்றியுள்ளார்?   | 
  
 
  | 
  
  
 |  
  4. 
  
  
  | 
  கவியரசு 
 கண்ணதாசனின் மொழிப் பற்றுக்குச் சான்று
 தருக.  | 
  
 
  | 
  
  
 |  
  5. 
  
  
  | 
 
   மாங்கனியில் 
 பயிலும் உவமைகளுள் சிலவற்றை
 எடுத்துக் காட்டுக.  | 
  
 
  | 
  
  
 |  
  6. 
  
  
  | 
 
   மாங்கனியில் 
 காணலாகும் காப்பியத் தாக்கத்தினைப்
 புலப்படுத்துக.   | 
  
 
  | 
  
  
  |