4.6 தொகுப்புரை | |||||||||||||||||||||||||
நண்பர்களே ! இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள்; என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள். நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது. இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படும் முறை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன் உணக்கல், மீன் கறி ஆக்கல், இயற்கையையும் உறவாக நினைத்தல், மடலேறுதல் முதலிய நெய்தலின் சிறப்புகளை அறிந்துகொள்ள முடிந்தது. நெய்தல் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து கொண்டு. |
|||||||||||||||||||||||||
|