3.2 ஒரு மொழிபெயர்ப்பின் சிறப்புக் கூறு
மூலமொழியின் கருத்துகள் விடுபடாமல் மூலநூலின்
சிறப்பை மொழி பெயர்ப்பில் கொண்டு வரவேண்டும்.
மிகைப்படுத்தியோ குறைத்தோ சொல்லப்படுமானால் அது
சிறந்த மொழிபெயர்ப்பாக அமைய இயலாது. மூலமொழியில்
உள்ள சொற்களைக் குறிக்கோள் (பெறு)
மொழியில் உள்ள
சொற்களால் மாற்றி நிரப்புதல் முறையன்று. ஒருமொழியில்
சொற்களுக்கு இணையான மாற்றுச் சொற்களும் பொருளை
விளக்கப் பயன்படுத்தப்படும். ஆனால், அவற்றின்
பின்னணியை அறியாது மொழியாக்கம் செய்தால் அது நேரான
மொழி பெயர்ப்புப் பணிக்கான தன்மையைப் புலப்படுத்தாது.
சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அத்தொடரின் சரியான
உள்ளாழத்தை உணர இயலாது. ஒரு மொழியின் சொல்லை
மாற்றுமொழியில் இட்டு நிரப்பும் பணியாகவே இது மாறிவிடும்.
இது ஒருவகையில் மொழி மாற்றுப் பணியாக அமையுமே தவிர,
சீரிய மொழி பெயர்ப்புப் பணியாக அமைய இயலாது. மொழி
பெயர்ப்புப் பெறும் மொழியின் பரந்துபட்ட பயன்பாடு
கொண்ட சமனிகளைத் தேடிப் பயன்படுத்துவது
மிகுந்த
சிறப்புடையதாக அமையும்.
3.2.1 மொழிபெயர்ப்பாளர் தன்மைகள்
மொழிபெயர்ப்பாளரையும் ஒருவகையில் ஒரு சிறந்த
ஆசிரியர் என்று கூறலாம். இவரும் ஒரு வகையில் மக்களுக்குக்
கற்பிக்கிறார். அறியாத அல்லது அறிந்தும் ஈடுபாடில்லாத
ஒரு மொழியில் ஈடுபாடு கொள்ளச் செய்ய, இத்தகு மொழி
பெயர்ப்பாளர்கள் கிரியா ஊக்கிகளாகப் பயன்பட்டு
வருகின்றனர். ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத்
திறனாய்வுத்திறனும் தனித்து முடிவெடுக்கும்
அனுபவமும்
கட்டாயமாகத் தேவைப்படும் தகுதிகளாகின்றன.
அத்தகு மொழி
பெயர்ப்பாளர்களுக்குச் சில அடிப்படைத் தகுதிகள் தேவை.
அவை மொழித் திறனறிவு, சொற்களஞ்சிய அறிவு, இலக்கண
அறிவு, மரபுத்தொடர் அறிவு, சொற்பொருளியல் அறிவு,
சமூகப்பண்பாட்டறிவு என்ற அடிப்படையில் அமையும். ஒரு
மொழிபெயர்ப்பாளர் மூலநூலாசிரியரை, பெறுமொழியாளர்
அருகே கொண்டு நிறுத்தவும், படிப்போரை மூலநூலாசிரியரிடம்
கொண்டு விடவும் வேண்டிய பணியை நயமாய்ச் செய்கிறார்.
சோர்வு என்பது மொழிபெயர்ப்பாளருக்கு ஆகாது. அதனால்
அவர் பாடுபட்டுச் செய்த பணியின் தரம் கெட்டுவிடும்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
மொழிபெயர்ப்புப்
பணி செய்ய வல்லவர் யார்? |
விடை |
2. |
நம்
நாட்டில் பண்டைக்காலம் தொட்டே மொழிபெயர்க்கப்பட்டு வந்தது
எது? |
விடை |
3. |
மூலமொழிக்கும்
பெயர்ப்பு மொழிக்கும் என்ன பெயர் வழங்கப்படுகிறது? |
விடை |
4. |
மொழிபெயர்க்கப்படும்
போது எத்தகு சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்? |
விடை
|
5. |
மொழிபெயர்ப்பாளனுக்குக்
கட்டாயம் தேவைப்படும் தகுதிகள் யாவை? |
விடை
|
|
|