தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

மருத்துவ நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுக.

டாக்டர் கட்டர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த மருத்துவ நூலான ‘Anatomy, Physiology and Hygiene’ என்ற நூலை ''அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல்'' என்ற பெயரில் 1852இல் ஃபிஷ் கிரீன் (Fish Green) மொழிபெயர்த்தார். தமிழ்வடிவில் வெளிவந்த முதல் மருத்துவ நூல் இதுதான்.

இதன்பிறகு 1857ஆம் ஆண்டு டாக்டர். ஃபிஷ் கிரீன் (Fish Green) மேற்பார்வையில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட மருத்துவ நூல் ''பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம்'' (Midlcifery) என்பது ஆகும்.

1865இல் ஜெகந்நாத நாயுடு என்பவர் சரீர வினாவிடை (A catechism of Human Anatomy and Physiology) என்ற பெயரில் வினாவிடை மருத்துவ நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.

முன்