மொழிபெயர்ப்பின் அறிவியல் சார்ந்த விளைவுகள்
யாவை?
அறிவியல் சார்ந்த விளைவுகளை இரண்டு நிலைகளில்
காணலாம். ஆய்வின் போது தருக்க முறையில் தரவுகளைத்
தொகுத்து, அணுகும் நேர்மையான அணுகுமுறை ஒன்று;
அறிவியல் நூல்களான புவியியல், இயற்பியல், வேதியியல்,
உயிரியல்-விலங்கியல், தாவரவியல், கணினியியல் எனப்
பல்வேறு அறிவியல், தொழில்நுட்பத் துறையில்
மொழிபெயர்ப்பின் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவது,
மற்றொன்று.
|