சங்க இலக்கியங்களிலுள்ள எவற்றையெல்லாம் அதே
பொருளில் மொழிபெயர்க்க இயலாது?
சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள திணை, துறை,
அகம், புறம், தோழி, பாங்கன், பாணன், பாடினி,
வெறியாட்டு, அறத்தொடு நிற்றல் முதலியவற்றை அதே
பொருளில் மொழிபெயர்க்க முடிவதில்லை. இம்மாதிரியான
நிலைகளில் மொழிபெயர்ப்புப் பணியானது
அடிக்குறிப்புகளில் விளக்கப்படுதல் நலம்.
|