பாடம் - 1

P20131 சொல்லாக்கம் - பொது அறிமுகம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் சொல் பற்றிய விளக்கத்தைக் கூறுகின்றது; மொழிபெயர்ப்பில் சொல்லாக்கம் பற்றிய பொதுவான தகவல்களை விவரிக்கின்றது.

தமிழில் சொல்லாக்கம் உருவான விதம், வரலாறு பற்றியும், சொல்லாக்கத்தின் வகைகள், முறைமைகள், தேவைகள், விளைவுகள் பற்றியும் விளக்குகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



  • சொல்லின் இலக்கணத்தையும், தமிழில் சொல் பற்றிய பல்வேறு
        கருத்துகளையும் அறியலாம்.

  • சொல்லாக்கம் குறித்து விரிவாக அறிய இயலும்.

  • தமிழில் சொல்லாக்கம் பெறுமிடத்தினை அறியலாம்.

  • தமிழில் நடைபெற்றுள்ள சொல்லாக்க முயற்சிகளின்
        வரலாற்றினை அறிந்து கொள்ளலாம்.

  • சொல்லாக்கத்தின் தேவைகள், விளைவுகள், பயன்கள்,
        முறைமைகள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

பாட அமைப்பு