4.1
சொல்லாக்க முயற்சிகள்
பிற மொழியிலுள்ள கலைச்சொற்களைத் தமிழாக்குகையில்,
சொல்லாக்க முயற்சிகள் அவசியமாகின்றன. சொல்லாக்கத்தில்
முனைந்திடுவோர் பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொள்ள
வேண்டும்:
(1)
|
பழஞ்சொற்களைப்
பயன்படுத்துதல் |
(2)
|
சொற்பொருள்
விரிவு |
(3)
|
புதுச்சொல்
படைப்பு |
(4)
|
மொழிபெயர்ப்பு |
(5)
|
கடன்
பெறல் |
4.1.1
பழஞ்சொற்களைப் பயன்படுத்துதல்
தமிழ் போன்ற வரலாற்றுச்
சிறப்புடைய மொழியில்
வளமையான சொற்களஞ்சியம் உள்ளது. காலந்தோறும்
படைக்கப்படும் இலக்கியப் படைப்புகளும் பல்துறை சார்ந்த
நூல்களும் மொழியின் வளத்தினுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
நிகண்டுகள் ஒரு வகையில் சொற்களஞ்சியம்
ஆகும்.
இந்நிலையில் சொல்லாக்கத்தில் முனைந்திடும் வல்லுநர்,
தேவைப்படின் ஏற்கெனவே இலக்கிய வழக்கிலுள்ள
பழஞ்சொற்களைத் தேர்ந்தெடுத்துப்
பொருத்தமாகப்
பயன்படுத்தலாம். புதிய கருத்தினை
வெளிப்படுத்த,
பழஞ்சொல்லை மீட்டுருவாக்கிப்
பயன்படுத்துவது
ஏற்புடையதாகும்.
எழுத்து வழக்கிலுள்ள பழஞ்சொற்களைப் போலவே
பேச்சு
வழக்கிலுள்ள சொல்லையும் சொல்லாக்கத்தில் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு:
Market |
- |
அங்காடி |
Machine |
- |
பொறி |
Vehicle |
- |
ஊர்தி |
Temple trustee |
- |
கோவில் முறைகாரர் |
Memory storage |
- |
நினைவுக் கிடங்கு |
Screw
Driver |
- |
திருப்பு உளி |
Plump
rule |
- |
தூக்குக்
குண்டு |
Scaffolding
|
- |
சாரம் |
Winding |
- |
சுருளை |
Chisel |
- |
வெட்டுளி,
உளி |
4.1.2
சொற்பொருள் விரிவு
சொல்லுக்கான
பொருளைச் சிறிது விளக்கிப் புதிய
கருத்துப்படிவம் அமைத்தல் சொற்பொருள் விரிவு ஆகும். திணை,
நீர்த்துறை முதலிய பொருள்களைக் கொண்ட ‘துறை’
என்னும்
சொல், இப்போது ஒன்றின் பகுதி,
தனிப்பகுதி என்னும்
பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
4.1.3
புதுச்சொல் படைப்பு
ஒரு மொழிக்கு அறிமுகமாகும்
புதிய கண்டுபிடிப்புகள்
அல்லது சிந்தனையை விளக்கிடப் புதுச்சொல் படைக்க வேண்டிய
தேவை ஏற்படுகிறது. எனினும் முற்றிலும்
புதிதாக ஒரு
சொல்லினைப் படைக்க இயலாது; மொழி மரபும் சொல்லாக்க
விதிகளும் பின்பற்றப்பட வேண்டும். புதிய சொற்களைத் தனிச்
சொற்களாகவோ அல்லது தொகைச்
சொற்களாகவோ
உருவாக்குவதில் முன்னொட்டு, பின்னொட்டு வரையறுத்தல், புதிய
விகுதிகளைச் சேர்த்தல் முதலியன முக்கியப் பங்காற்றுகின்றன.
முன்னொட்டு
முன்னொட்டு
இணைத்துச் சொல்லாக்குதல்
வழக்கிலுள்ளது. Super என்னும் சொல்லைச்
சேர்த்து
ஆங்கிலத்தில் செய்வது போல் தமிழில் ‘மேல்’ என்பதைச்
சேர்த்துப் பயன்படுத்துகிறோம்.
எடுத்துக்காட்டு:
Superstructure |
- |
மேற்கட்டுமானம் |
Superscript |
- |
மேல் எழுத்து |
Toxic Headache
|
- |
நச்சுத்
தலைவலி |
Toxic element |
- |
நச்சுத்
தனிமம் |
Toxic
effects |
- |
நச்சு
விளைவுகள் |
Toxicity |
- |
நச்சியல்பு |
சொல்லுடன்
பின்னொட்டினை இணைத்துச்
சொல்லாக்கத்தில் ஈடுபடலாம்.
மானி:
Lactometer |
- |
பால்மானி |
Thermometer
|
- |
வெப்பமானி |
Electrometer |
- |
மின்மானி |
4.1.4
மொழிபெயர்ப்பு
சொல்லாக்கத்தில் மொழிபெயர்ப்பு
முக்கிய இடம்
வகிக்கின்றது. தமிழில் இதுவரை
உருவாக்கப்பட்டுள்ள
பெரும்பாலான கலைச் சொற்கள் மொழிபெயர்ப்பு
ஆகும்.
மொழிபெயர்ப்பு மூலக் கருத்தினை விளக்குவதாக
அமைய
வேண்டும்.
எடுத்துக்காட்டு:
Computer
|
- |
கணினி |
University
|
- |
பல்கலைக்கழகம் |
Cone |
- |
கூம்பு |
Setsquare |
- |
மூலை மட்டம் |
Fossil |
- |
புதை படிவம் |
Discourse
|
- |
சொல்லாடல் |
Psychology
|
- |
உளவியல் |
4.1.5
கடன் பெறல்
புதிய கருத்தியலைத் தமிழாக்குகையில்,
அதற்கு நிகரான
தமிழ்ச்சொல் இல்லாதபோதும், புதிய சொல்லைப் படைப்பதில்
சிரமம் ஏற்படும்போதும் உலகப் பொதுமை கருதியும் பிறமொழிச்
சொல்லைக் கடன் வாங்கிக் கொள்ளலாம். எனினும் நாளடைவில்
நிகரான சொற்கள் உருவாக்கப்படும்போது தமிழ்ச் சொற்களைப்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டு:
Meter |
- |
மீட்டர் |
X-ray |
- |
எக்ஸ்ரே |
Kilo |
- |
கிலோ |
Liter |
- |
லிட்டர் |
|