4.2 சொல்லாக்கமும் பாவாணரும்
சொற்பிறப்பியல்
துறையில் வல்லுநரான தேவநேயப்
பாவாணர், வழக்கற்ற தமிழ்ச் சொற்களை வழக்காறுபடுத்துவதும்,
நடைமுறைக்கு வேண்டிய புதுச் சொற்களைப்
புனைந்து
கொள்ளுவதும் ஆகிய இருவழிகளில் சொல்லாக்கத்தினைச்
செய்யலாம் என்கிறார். மேலும் அவர்
இதனால் தமிழ்
தனித்தியங்கும் என்று குறிப்பிடுகின்றார்.
சொல்லாக்க நெறிமுறைகளை
வகுத்திடப் பாவாணர்
பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிடுகின்றார்:
(1)
|
விகுதி
வழி ஆக்கம் |
(2)
|
நேர்ச்சொல்
காணல் |
(3)
|
மொழிபெயர்ப்புவழி
ஆக்கம் |
(4)
|
வேர்ப்பொருள்
சொல் காணல் |
(5)
|
சிறப்பியற்
சொல் |
(6)
|
ஒலிபெயர்ப்பு |
4.2.1
விகுதிவழி ஆக்கம்
பொருள் வேறுபாட்டினுக்கேற்பச் சொற்களைத்
திரித்து, ஒரே
சொல்லிலிருந்து பல சொற்களை உருவாக்குவதில்
தமிழில்
விகுதிகள் உதவுகின்றன. தல்,
அம், ஐ, கை போன்ற பெயர்
ஈறுகள் மட்டும் முப்பதிற்கு மேலுள்ளன. மேலும் வினை முதல்
ஈறுகள், செயப்படுபொருள் ஈறுகள் போன்ற ஈறுகளையும் குறுமைப் பொருள், பெருமைப் பொருள்
முதலியன பற்றிய முன் பின்
ஒட்டுக்களைப் பயன்படுத்திச் சொல்லாக்கத்தினை உருவாக்கலாம்
என்கிறார் பாவாணர்.
Bacteria என்பது சிறு
குச்சுப் போலத் தோன்றும்
புழுவின் பெயர். இது குச்சு
என்று பொருள்படும் Baktron
என்பதன் திரிபு. என்பது
தமிழில் குறுமைப் பொருளின்
பின்னொட்டாக விளங்குவதனால் குச்சு என்பதனுடன்
என்ற
பின்னொட்டைச் சேர்த்துக் குச்சில்
என்ற சொல்
உருவாக்கப்படுகிறது.
4.2.2
நேர்ச்சொல் காணல்
மூலச் சொல் எந்தப்
பொருளை அல்லது கருத்தை
மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, அதே
பொருள்
அல்லது கருத்தினை மூலமாகக் கொண்டு தமிழ்ச்
சொல்லை
உருவாக்க வேண்டும் என்கிறார் பாவாணர்.
Mail என்ற ஆங்கிலச் சொல்
பை என்றும் பொருளை
அடிப்படையாகக் கொண்டது. பின்னர் பைக்குள்
இருக்கும்
கடிதங்களையும், அவற்றைக் கொண்டு செல்லும் வண்டியையும்
குறித்தது. எனவே mail என்ற சொல்லை
அஞ்சல் என்று
மொழிபெயர்க்கலாம்.
4.2.3
மொழிபெயர்ப்பு வழி ஆக்கம்
ஆங்கிலச் சொல்லை உள்ளவாறே
மொழிபெயர்த்தலும்
சொல்லாக்கத்திற்குத் துணை செய்யும். Duodenum
என்பது
பன்னிரண்டு என்னும் இலத்தீன் எண்ணுப்பெயர். அது ஆங்கிலத்தில்
பன்னிரு அங்குலம் அளவுள்ள சிறு குடற்பகுதியைச் சுட்டுகிறது.
எனவே அச்சொல்லைத் தமிழில் பன்னீரம்
என உருவாக்கலாம்.
4.2.4
வேர்ப்பொருள் சொல் காணல்
பிறமொழிச் சொல்லின் மூலத்தினை
அறிந்து அதற்கேற்பத்
தமிழில் சொல்லாக்கம் செய்வதனை இவ்வகையில் அடக்கலாம்.
Pen என்ற ஆங்கிலச்
சொல் feather (தூவி) என்று
பொருள்படும் Penna என்ற இலத்தீன் சொல் திரிபு. எனவே pen
என்பதற்குத் தூவல் என்று சொல்லாக்கம்
செய்யலாம் என்கிறார்
பாவாணர்.
4.2.5
சிறப்பியற் சொல் காணல்
ஒரு பொருளின் சிறப்பியல்பைக்
கருத்திற்கொண்டு
பெயரிடும் தன்மை தமிழ் மரபில் உள்ளது. அம்மரபின் வழியாகச்
சொல்லாக்கத்தினை உருவாக்கலாம். Train
என்பதனைப்
புகைவண்டி என்பதும் Cycle என்பதனை மிதிவண்டி என்பதும்
இவ்வகையிலேயே அமைந்தன.
4.2.6
ஒலிபெயர்ப்பு
கண்டுபிடித்தவரின் பெயர்
அல்லது இடப்பெயரால்
அமைந்துள்ள பொருள்கள் அல்லது கலை முறைகளை அப்படியே
ஒலிபெயர்த்துச் சொல்லாக்கம் செய்திடல் வேண்டும் என்கிறார்
பாவாணர்.
|