தன் மதிப்பீடு : விடைகள் - I
ஒரு மொழிக்கு
அறிமுகமாகும் புதிய
கண்டுபிடிப்புகள் அல்லது சிந்தனையை
விளக்கிடப் புதுச்சொல் படைக்க வேண்டிய
தேவை ஏற்படுகிறது. எனினும் முற்றிலும்
புதிதாக ஒரு சொல்லினைப் படைக்க இயலாது;
மொழி மரபும் சொல்லாக்க விதிகளும்
பின்பற்றப்பட வேண்டும். புதிய சொற்களைத் தனிச் சொற்களாகவோ அல்லது தொகைச்
சொற்களாகவோ உருவாக்குவதில் முன்னொட்டு,
பின்னொட்டு வரையறுத்தல், புதிய விகுதிகளைச்
சேர்த்தல் முதலியன முக்கியப் பங்காற்றுகின்றன.
முன்னொட்டு
முன்னொட்டு இணைத்துச் சொல்லாக்குதல்
வழக்கிலுள்ளது.
Super structure - மேற்கட்டுமானம்
பின்னொட்டு
சொல்லுடன் பின்னொட்டினை இணைத்துச்
சொல்லாக்கத்தில் ஈடுபடலாம்.
Lactometer - பால்மானி
5) புதுச்சொல்
படைப்புப் பற்றி விளக்குக.