இந்தப் பாடம்
சொல்லாக்கம் காரணமாக உருவாக்கப்பட்ட
அகராதிகளின் தன்மையையும்,
செயற்பாட்டினையும்
விவரிக்கின்றது.
ஆட்சிச் சொல்லகராதிகளில்
காணப்படும் சிக்கல்களையும்
விவாதிக்கின்றது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழில் அகராதியின்
தோற்றம் பற்றி அறியலாம்.
சொல்லாக்கம்
காரணமாக உருவாக்கப்பட்ட அகராதிகளின்
பின்புலத்தினை அறிந்து கொள்ளலாம்.
பல்துறை சார்ந்த
அகராதிகள், ஆட்சிச் சொல் அகராதிகள்
ஆகியவற்றின் உருவாக்கத்தில் காணப்படும் முரண்களையும்
அவற்றைக் களைவதற்கான தீர்வுகளையும் பற்றி
அறிய
இயலும்.