|  
   | 
 
  
          |   
               ஆட்சியிலிருந்து அரசினை நடத்திட உதவும் மொழி
              ஆட்சிமொழி ஆகும். அது ஒரு வகையில் ஆளுவோருக்கும்
              பரந்து பட்ட மக்களுக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றது.
              அரசின் ஆணைகளையும் கருத்தியலையும் வெளிப்படுத்திட
              உதவும் ஆட்சி மொழியானது அரசியல் முக்கியத்துவம்
              வாய்ந்தது. ஆட்சியாளரின் மொழிக்கும் ஆளப்படுகின்ற
              மக்களின் மொழிக்கும் இடையிலான முரண்பாட்டினை, அரசியல்
              அடிப்படையில் தான் விளங்கிக் கொள்ள இயலும். இங்கு
              மொழியானது கருத்தியல் வெளிப்பாட்டுக் கருவி என்ற
              நிலையைக் கடந்து ஒடுக்குமுறை ஆயுதமாக வடிவமெடுக்கின்றது.
              இந்நிலையில் நாட்டின் விடுதலையுடன் மொழி விடுதலையும்
              இணைகின்றது.   | 
 
  
 |  
   
 1.1.1 தமிழகத்தில் ஆட்சி மொழி   | 
 
  
   
 
     சங்க காலத்திலும் அதற்குப் பிந்திய காலக்கட்டத்திலும் தமிழ்
 மொழியே ஆட்சிமொழியாக இருந்தது. மன்னர் ஆட்சியை
 நடத்திட உதவிய பல சொற்கள் இன்றும் கூடத் 
 தமிழக
 ஆட்சியாளருக்கு உதவியாக உள்ளன. 
                 களப்பிரரும், பல்லவரும் தமிழகத்தை ஆட்சி செய்தபோது, பாலி, பிராகிருதம், 
              சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அரசின் ஆதரவு பெற்று வளமடைந்தன. வடமொழியும் 
              தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை புதிதாக உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே 
              வழக்கிலிருந்த தமிழ்ச்சொற்கள் வட மொழிக்கு மாற்றப்பட்டன. இவ்வாறு மாற்றி 
              எழுதுவது சிறப்பு என்ற கருத்து வலுப்பெற்றது. இத்தகைய மாற்றம் பெற்ற 
              சொற்கள் பின்வருமாறு:   | 
 
  
   
 
  
 | அரசன் | 
  
 - ராஜன் | 
  
  
 | மண்டிலம் 
  | 
 - மண்டலம் | 
  
  
 | அவை 
  | 
 - சபை | 
  
  
 | திரு | 
 - ஸ்ரீ | 
  
  
 | அரியணை 
  | 
 - சிம்மாசனம் | 
  
  
 | தேர் 
  | 
 - 
 ரதம் | 
  
  
 | யானை 
  | 
 - 
 கஜம் | 
  
    | 
 
  
  
 
 
     ஆட்சிமொழிச் சொற்களில் ஏற்பட்ட 
 மாற்றம், சோழ 
 மன்னர்களின்     பெயர்கள்,     கோயில்களின் 
 பெயர்கள்
 போன்றவற்றையும் பாதித்தது.எனினும் சோழர் காலத்தில் ஆட்சிமொழிச் சொற்கள் பெரிதும் தமிழிலேயே இருந்தன.   | 
 
  
 |  
   
 1.1.2 பிற்காலப் பாண்டியர் காலம்   | 
 
  
  
 
 
     பிற்காலப் பாண்டியர்கள் அரியணையில் வீற்றிருந்தபோது
 தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடை செல்வாக்குப்
 பெற்றது. ஆட்சித் தமிழ்ச்சொற்கள் பல வடமொழி
 ஆக்கப்பட்டுத்
 தமிழில் எழுதப்பட்டன. எடுத்துக்காட்டு : 
  
 அகப்பரிவாரம், 
 பிரம தேயம், சரஸ்வதி  
 பண்டாரம், உத்திர மந்திரி. 
  
 எனினும் தமிழ் 
 ஆட்சிமொழி என்ற செல்வாக்கினை
 இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   | 
 
  
 |  
   
 1.1.3 வேற்றுநாட்டவர் ஆட்சிக்காலம்   | 
 
  
  
 
 
     வேற்றுநாட்டைச் சார்ந்த முகலாயர், மராட்டியர், 
 தெலுங்கர்,
 ஆங்கிலேயர் ஆகியோர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து
 ஆட்சி செய்தனர். அவர்கள் காலத்தில் 
 பல பிறமொழிச்
 சொற்கள் தமிழ் ஆட்சி மொழியில் இடம் பெற்றன. 
 • 
 முகலாயர் ஆட்சி 
 
 
   | 
  
 
  தாஜ்மகால்  | 
  
  
                கி.பி.16-ஆம் 
              நூற்றாண்டிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த
              முகலாயர், தில்லி சுல்தான்களின் ஆட்சி, வெவ்வேறு காலக்கட்டங்களில் 
              தமிழகத்தில் நடைபெற்றது. அப்பொழுது ஏராளமான     அரபி, 
                  பாரசீக, இந்துஸ்தானிச்சொற்கள் ஆட்சிச்சொற்களாகத் 
              தமிழுக்கு வந்து சேர்ந்தன. 
              அவற்றுள் சில  | 
 
  
   
 
  
 | அசல் | 
 கிஸ்தி 
  | 
 தஸ்தாவேஜி 
  | 
 முன்சீப் | 
  
  
 | தாசில் | 
 பட்டுவாடா | 
 ராஜிநாமா | 
 ஜில்லா | 
  
  
 | ஜப்தி 
  | 
 மாஜி 
  | 
 அமீனா 
  | 
 பிர்க்கா | 
  
  
 | வாபஸ் 
  | 
 மகஜர் 
  | 
 ரத்து 
  | 
 பாரா | 
  
  
 | பாக்கி | 
  மராமத்து 
  | 
 ரொக்கம் 
  | 
 சிரஸ்தார் | 
  
  
 | ஜாமீன் 
  | 
 அயன் 
  | 
 சிபாரிசு 
  | 
 சீல் | 
  
    | 
 
  
  
 
 
 மேற்குறித்த சொற்களுக்குப் பொருத்தமான சொற்கள், ஏற்கெனவே
 தமிழில் ஆட்சி மொழியில் இடம்பெற்றிருப்பினும் ஆளுவோரின்
 நலனுக்கேற்ப, அவை மாற்றி அமைக்கப்பட்டன. இவற்றில் பல
 சொற்கள் மக்களிடையே இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன. 
 • 
 மராட்டியர், தெலுங்கர் ஆட்சி      மராட்டியரும், தெலுங்கரும் 
 தமிழகத்தை ஆண்ட போது மராட்டி,
 தெலுங்குச் சொற்கள் ஆட்சி மொழிச் 
 சொற்களாகத்
 தமிழ் ஆக்கப்பட்டன. (எ.கா) ஆஸ்தி, சன்மானம், கிரயம். 
 • 
 ஐரோப்பியர் ஆட்சி 
 
 
   | 
  
 
 ஆங்கிலேயர்  | 
  
  
     கி.பி.15-ஆம் நூற்றாண்டின் 
 இறுதியிலிருந்து 1947-ஆம் ஆண்டு
 வரை இந்தியாவில் போர்த்துக்கீசியர், டேனிசுக்காரர், டச்சுக்காரர்,
 ஒல்லாந்தார், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் 
 முதலானோர்
 வணிகச் சங்கங்களை அமைத்து வணிகம் 
 செய்ததுடன்,
 காலப்போக்கில் ஆட்சி அதிகாரத்தினைக் 
 கைப்பற்றினர்.
 இவர்களில் ஏறத்தாழ 350 ஆண்டுகள் 
 இந்தியாவை
 ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் மட்டுமே. இதனால் பல்வேறு
 ஐரோப்பிய மொழிச் சொற்கள் அப்படியே தமிழ் 
 வடிவம்
 பெற்றன.  |