 |
உலக வரைபடம் |
அறிவியலின்
மாபெரும் வளர்ச்சி காரணமாகவும், தகவல்
தொடர்பியல் கருவிகளின் நவீன கண்டுபிடிப்புகளின்
விளைவாகவும் உலகம் முழுவதும், பல்வேறு மொழிகளில்,
நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் அறிவியல் கட்டுரைகளும்,
நூல்களும் வெளியிடப்படுகின்றன. இத்தகைய வெளியீடுகள்
பெரும்பாலும் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன், ஜெர்மன், சீன,
ஜப்பானிய மொழிகளில் வெளியாகின்றன. அறிவியல்
நுணுக்கங்களை அறிய விரும்பும் அறிவியலாளர்களால், ஓரிரு
மொழிகள் மட்டுமே அறிந்த நிலையில் சர்வதேச ஆய்வுப்
போக்கினை அறிந்து கொள்வது இயலாதது.
·
அறிவியல் வளர்ச்சி
 |
|
 |
கணிப்பொறி |
கைபேசி |
தொலைக்காட்சி |
இதுவரை
கண்டறியப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள்,
தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைவிட இன்னும் பத்தாண்டுகளில்
அறிவியலின் வளர்ச்சி இருமடங்காகிவிடும் என்று
தகவல்
அறிவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். புதிய துறைகளின்
தோற்றம், ஒரு துறைக்குள்ளேயே சிறப்பான
தனித்துவம்
வாய்ந்த நுண்ணிய துறைகள் தோன்றுதல், ஒன்றுக்கும் மேற்பட்ட
துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வுகள் போன்றவை அறிவியல்
வெளியீடுகளைத் துரிதப்படுத்துகின்றன.
·
ஆய்வு இதழ்கள் வளர்ச்சி
ஆய்வகங்களில்
கண்டறியப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள்,
துறைசார்ந்த ஆய்வு இதழ்களில் (Journals) முதன் முதலாக
வெளியிடப்படுகின்றன. அறிவியல் வெளியீடுகளில் இதழ்கள்
அரும்பணியாற்றுகின்றன. 1800-ஆம் ஆண்டில் இதழ்களின்
எண்ணிக்கை 100 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கையானது
1850ஆம் ஆண்டில் 1000; 1900இல் 10,000; 1950இல்
1,00,000; 2000இல் 10,00,000 என்று பிரம்மாண்டமாக
வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவியலில் பல்துறை
சார்ந்த
அறிவியல் நூற்களின் வெளியீடும் பன்மடங்கு அதிகரித்து
உள்ளது.
·
மொழிபெயர்ப்புகள்
இந்நிலையில்
மொழிபெயர்ப்புகள் மூலமாகவே அறிவியல்
கருத்துகளை வல்லுநர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியா
போன்ற வளரும் நாடுகளில், அறிவியல் முன்னேற்றத்திற்கு
மொழிபெயர்ப்புகள் அடிப்படையாக விளங்குகின்றன. மேலும்
அறிவியல் மொழிபெயர்ப்புகள் உலக மக்களை ஒருங்கிணைக்கும்
மகத்தான பணியையும் செய்கின்றன.
|