1831-இல் வெளியான ‘தமிழ் மாகசீன்’ என்ற இதழில்
அறிவியல் தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றன. அதனைத்
தொடர்ந்து தமிழில் வெளியான பல்வேறு வெகுசன இதழ்களில்
பிறமொழியில் வெளியான கட்டுரைகளைத் தழுவியோ,
மொழிபெயர்த்தோ வெளியிடும் போக்கு உள்ளது. ‘கலைக் கதிர்’
இதழ் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளுடன் வெளிவருகிறது.
அறிக அறிவியல், துளிர், களஞ்சியம், சூழல் உலகம், விவசாய
உலகம், தொழில் நண்பன், ஹெல்த் லைப், மருத்துவ அறிவியல்
மலர் போன்ற பல்துறை அறிவியல் இதழ்களில், தழுவியும்
மொழிபெயர்த்தும் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.
ஆங்கிலத்தில்
வெளியாவதுபோல, துறைசார்ந்த இதழ்கள்
(Journals) தமிழில் மிகக்குறைவாகவே வெளியாகின்றன.
இத்தகைய இதழ்களில் வெளியாகும்
மொழிபெயர்ப்புக்
கட்டுரைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
|