மக்களாட்சி முறை நிலவும் ஒருநாட்டில் சட்டம்
இயற்றுதலும்
அதனைச் செயற்படுத்துதலும் அடிப்படையான அம்சங்கள்
ஆகும். சமுதாய அமைப்பு மக்கள் ஒருவருக்கொருவர்
ஒருங்கிணைந்து செயல்பட, ‘சட்டம்’ தேவைப்படுகிறது.
இன்னொரு நிலையில் அதிகாரத்தில் இருந்து ஆட்சியை
நடத்தும் ஆட்சியாளர்களின் நலனுக்கேற்பவும் சட்டங்கள்
இயற்றப்படுகின்றன. கடந்த முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்
இந்தியாவை ஆண்டபோது, அவர்களுடைய சுரண்டல்,
அதிகாரத்திற்கு ஏற்ப ஆங்கிலத்தில் சட்டங்கள் எழுதினர்.
நாட்டு விடுதலைக்குப் பின்னர், புதிதாக எழுதப்பட்ட இந்திய
அரசியல் நிர்ணயச் சட்டம் ஆங்கிலத்திலேயே இருந்தது.
சட்டமானது சராசரி மனிதருக்குப் புரிய வேண்டும் என்ற
நிலையேற்பட்டபோது, அதனைத் தமிழில் மொழிபெயர்க்கும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுது ஏற்பட்ட
பிரச்சினைகள் தனித்தன்மை கொண்டவை. இன்று பரந்து பட்ட
மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடம்பெறும் சட்ட மொழிபெயர்ப்புகளின் பல்வேறு கூறுகளையும் எளிதில் புரிந்து
கொள்ளும் வகையில் இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
|