பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மன்
காலத்தில்
பெருந்தேவனார், மகாபாரதத்தினைத் தழுவித் தமிழில் பாரத
வெண்பா என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூலின்
சில
பகுதிகள்தான் கிடைத்துள்ளன.
மூன்றாம்
குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டில் மகாபாரதம்
பற்றிய குறிப்பு உள்ளது. ஆசிரியர் பெயர், நூலின்
பெயர்
போன்றன பற்றி அறிய இயலவில்லை.
கி.பி.15-ஆம்
நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வாரும்,
கி.பி.16-ஆம் நூற்றாண்டில் அரங்கநாதக்
கவிராயரும்,
கி.பி.18-ஆம் நூற்றாண்டில் நல்லாப்
பிள்ளையும்
மகாபாரதத்தினைத் தமிழில் தழுவலாகத் தந்துள்ளனர்.
மகாபாரதத்தில்
இடம்பெற்றுள்ள கிளைக் கதைகள் தமிழில் தழுவியெழுதப்பட்டன. நாட்டுப்புறக் கதைகளாகப் பல்வேறு
பாரதக் கதைப் பாடல்கள் தமிழாக்கப்பட்டுள்ளன. அல்லி
அரசாணி மாலை, பிலவேந்திரன் மாலை, நளவெண்பா,
குசேலோபாக்கியானம் போன்ற நூல்கள்
பாரதத்தினை
மூலமாகக் கொண்டவை ஆகும்.
இருபதாம்
நூற்றாண்டில் வெளிவந்த பாரதியின் பாஞ்சாலி
சபதம், கவிதை வடிவில் அமைந்தது; இது பாரதத்தில் ஒரு
நிகழ்ச்சியை விளக்குகிறது. இராஜாஜியின் வியாசர் விருந்து
உரைநடை வடிவில் வெளிவந்த மகாபாரதக் கதை.
|