5.2
விளம்பர மொழிபெயர்ப்புகளின் வகைகள்
|
|
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட விளம்பரங்களை ஆராய்ந்திடும்
போது, சொல் நிலையிலும் தொடர் நிலையிலும் பல்வேறு
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனைக் காண இயலுகின்றது. இவை புதிய
வகைப்பட்ட தமிழினை உருவாக்கிடும் வல்லமை பெற்றனவாகும்.
|
5.2.1 சொல்
மொழிபெயர்ப்புகள்
|
விளம்பரதாரர்களின் விருப்பத்திற்கு இணங்க, விளம்பர
நிறுவனங்கள் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கிடும் சொற்களின் மொழி பெயர்ப்புகள் பன்முகத்தன்மையுடையன. எந்த
வகையிலும் வாடிக்கையாளரின் மனத்தில் பொருள் பற்றிய
கருத்தினைப் பதிய வைப்பதற்காகத் தயாரிக்கப்படும்
விளம்பரங்களில் இடம் பெறும் சொற்கள், பின்வரும் வகைகளில்
தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன.
-
நேர்
மொழிபெயர்ப்புகள் -
கூட்டுச்
சொல்லின் ஒரு பகுதியை மட்டும் தமிழாக்குதல் -
ஆங்கிலச்
சொல்லை, இன்னொரு ஆங்கிலச் சொல்லினால் மொழிபெயர்த்தல் -
ஆங்கிலச்சொல்லினைப்
பிறமொழிச்சொல்லாக
மொழிபெயர்த்தல்
-
பொருந்தாத
சொல்லாக்கம் -
தமிழையும்
ஆங்கிலச் சொல்லையும் கலந்து எழுதுதல்
|
5.2.2
நேர் மொழிபெயர்ப்புகள்
|
பிற மொழிச் சொல்லைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கும்போது, தமிழில் புதிய சொற்கள் உருவாகுகின்றன. இதனால்
தமிழ்மொழி வளம் அடைகின்றது. பொதுவாகத் தமிழில்
மொழிபெயர்க்கப்படும் விளம்பரங்களில் நேர்
மொழிபெயர்ப்பினுக்குப் போதிய முக்கியத்துவம்
தரப்படுவதில்லை. எனினும் அரசு அலுவலகங்கள் சார்பில்
விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்கள் நேர் மொழிபெயர்ப்பில்
உள்ளன.
|
Bore
well |
-
ஆழ்குழாய்க் கிணறு |
T.N.E.B
|
-
த.நா.மி.வா |
Virtual
University |
-
இணையப் பல்கலைக் கழகம் |
New
year |
-
புத்தாண்டு |
Fast
food stall |
-
துரித உணவகம் |
|
5.2.3 பகுதி
மொழிபெயர்ப்புகள்
|
ஆங்கிலத்திலுள்ள கூட்டுச் சொல்லின் ஒரு பகுதியை மட்டும்
தமிழாக்குவது விளம்பரத்தில் இடம்பெறுகின்றது.
பகுதி
மொழிபெயர்ப்பில் இரு சொற்கள் கொண்ட ஆங்கிலக் கூட்டு
வடிவத்தில் இரண்டு வகைகளில் பின்வரும் மொழிபெயர்ப்பானது
நிகழ்கின்றது.
-
முன் பகுதியை மட்டும் தமிழாக்குதல்
-
பின் பகுதியை மட்டும் தமிழாக்குதல்
· முன் பகுதி மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
கூட்டுச் சொற்களில் முன் பகுதியை மட்டும் மொழி பெயர்ப்பது வழக்கிலுள்ளது.
|
Air
Service |
-
விமான சர்வீஸ் |
Open
Market |
-
வெளி மார்க்கெட் |
Natural
Enzymes |
-
இயற்கை என்சைம்கள் |
|
· பின்பகுதி மொழிபெயர்ப்பு
சில
விளம்பரங்களில் ஆங்கிலக் கூட்டுச்
சொற்களில்
பின்பகுதியை மட்டும் மொழிபெயர்த்து வெளியிடுகின்றனர்.
|
Revenue
Minister |
-
ரெவினியூ அமைச்சர் |
Civil
Authorities |
-
சிவில் அதிகாரிகள் |
|
5.2.4
மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொல்
|
ஆங்கிலத்தில் உள்ள சொற்களைத் தமிழுக்கேற்ப
மொழிபெயர்க்காமல், ஆங்கிலத்தில் உள்ளவாறே தமிழில் ஒலி
பெயர்த்து எழுதுவது பெருவழக்காக உள்ளது. ஆங்கிலச்
சொல்லை மொழிபெயர்த்தல் சிரமம் அல்லது புதிய தமிழ்ச்
சொல் நுகர்வோருக்குப் புரியாது என்று
கருதுகின்ற
விளம்பரதாரர்கள், தத்தம் விருப்பம் போல விளம்பரங்களில்
எழுதுகின்றனர். விளம்பர மொழிபெயர்ப்பில்
அளவுக்கு
அதிகமாக ஆங்கிலச் சொற்களைக்
கடன் வாங்கித்
தமிழாக்குகின்றனர். உரிய தமிழ்ச் சொல்
இல்லாத போது
பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால்
நடுத்தர வர்க்கத்தினரைக் கவர்வதற்காகவே,
ஆங்கிலச்
சொற்களை அப்படியே தமிழாக்குவது ஏற்பு உடையதன்று.
|
Textiles |
- டெக்ஸ்டைல்ஸ் |
Diamond
Collection |
-
டயமண்ட் கலெக்ஷன் |
Great
Value |
-
கிரேட் வால்யு |
Herbal
Skin
Treatment |
-
ஹெர்பல் ஸ்கின்
ட்ரீட்மென்ட் |
Deluxe
Pressure
cooker |
-
டீலக்ஸ் பிரஷர் குக்கர் |
|
·
பிறமொழிச் சொல்லாக மொழிபெயர்த்தல்
ஆங்கிலச்
சொல்லை மொழிபெயர்க்கும்போது அதற்கு நிகரான
தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தாமல் சமஸ்கிருதச் சொற்களைப்
பயன்படுத்துவது விளம்பர உலகில் வழக்கில் உள்ளது. தமிழில்
சமஸ்கிருத மொழியின் தாக்கம் பல்லாண்டுகளாக இருப்பதனால்,
இத்தகைய போக்கு நிலவுகிறது. புதிய தமிழ்ச் சொல்லாக்கத்தினை
விட ஏற்கனவே வழக்கிலுள்ள சமஸ்கிருதச்
சொல்லைப்
பயன்படுத்துவது எளிது என்று விளம்பர மொழிபெயர்ப்பாளர்கள்
எண்ணியிருக்க வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக,
பிரார்த்தனை,
சமர்ப்பணம்,
கல்யாணம்,
ஆபரணங்கள், |

|
|
5.2.5 சொல்லாக்கம்
|
போலச் செய்தல் முறையில் சில சொற்களை விளம்பரதாரர்கள்
உருவாக்குகின்றனர். இத்தகைய சொற்கள் விளம்பரத்தினுக்கு
முக்கியத்துவம் தருகின்றன.
தமிழில் பெயரடைகளைப் பண்புப் பெயர்ச்சொற்களுடன் 'ஆன'
என்ற விகுதியை இணைத்து உருவாக்குகிறார்கள். இம்முறையில்,
தமிழாக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களுடன் 'ஆன' விகுதியைச்
சேர்த்துப் பெயரடைகளை உருவாக்குகின்றனர்.
ஸ்ட்ராங்
என்ற ஆங்கிலச் சொல்லுடன் ஆன என்ற விகுதியைச்
சேர்ப்பது தமிழ் மரபினுக்குப் பொருந்தாதது. எனினும் இச்சொல்
விளம்பரத்தில் பொருண்மை மிக்கதாகப் பயன்படுத்தப்படுகிறது.
|
தன்மதிப்பீடு
: வினாக்கள் - I
|
|
|
1. |
தமிழ்நாட்டின்
சந்தை எதன் காரணமாக உலக
வணிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது? |
|
|
|
|
|
|
2. |
விளம்பரங்களின்
தமிழ்மொழிபெயர்ப்புகள் எங்ஙனம்
உள்ளன? |
|
|
|
|
|
|
3. |
விளம்பரதாரர்கள்
எந்த முறையில் சில சொற்களை
உருவாக்குகின்றனர்? |
|
|
|