|  
  
     விளம்பரங்களில் எழுத்துமுறை மரபு மீறப்படுவது பொதுவாக
 வழக்கிலுள்ளது. ஆங்கிலச் சொல்லைத் தொடரின் 
 நடுவில்
 அப்படியே பயன்படுத்துவது ஏற்புடையதன்று. எனினும்
 ஆங்கிலம் மட்டும் கற்ற மேட்டுக்குடி மனப்பான்மையினரையும்
 கவருவதற்காக இத்தகைய விளம்பரங்கள் பயன்படுகின்றன.
 இன்னொரு வகையில் ஆராய்ந்தால், ஆங்கிலச் சொல்லைப்
 பயன்படுத்துவது, பொருள் பற்றிய உயர்ந்த கண்ணோட்டத்தினை
 உருவாக்கும் என்று விளம்பரதாரர் கருதியதாக, நாம் நினைக்க
 வாய்ப்பு உண்டு.  
 
     மெத்தை விளம்பரத்தில் புதிய Kurl-on சூப்பர் டீலக்ஸ்
 க்வில்டெட் என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.  
 
     அழகுநிலையம் 
     விளம்பரத்தில் இது Non-surgical 
 
 சிகிச்சையாகும் என்ற தொடரும், ஏஞ்சல்ஸின் 
 Figure
 Correction,     Spot Reduction புரொகிராம்கள்
 தேவையற்ற சதையை குறைத்து விடலாம் என்ற தொடரும்
 ஆங்கிலச் சொற்கள் கலந்து எழுதப்பட்டவற்றுக்குச் சான்றுகள்
 ஆகும். 
 · 
 தொடர்கள்  
 
     விளம்பரங்கள் 
 தமிழாக்கப்படும்போது, தவிர்க்கவியலாத
 நிலையில் ஆங்கிலச் சொல், தமிழ் வடிவத்தில் இடம் பெறுவது
 இன்று ஏற்புடையதாகிவிட்டது. ஆனால் சில விளம்பரங்களில்
 தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை விட ஆங்கிலச் சொற்களே
 அதிக அளவில் இடம் பெறுகின்றன.  
     பின்வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 
 விளம்பரம் இதற்குச் சிறந்த சான்று. 
   |