| 
  
 
  
 |  
 
  | 
  
  
 |  
    
                தமிழ் மொழியின் 
              இலக்கண விதிகளுக்கு மாறாக ஒலியன்
              மரபானது விளம்பரங்களில் மீறப்பட்டிருக்கின்றது. 
  | 
  
  
 |  
  
 5.4.1 ஆய்தம் 
  | 
  
  
 |  
  
     தமிழில் ஆய்தம் மொழிக்கு முன் வராது என்பது மரபு. ஆனால்
 விளம்பரங்களில் மொழி முதல் ஆய்தம், ஆங்கில எழுத்தான
 F ஐக் குறிக்கப் பகரத்துடன் சேர்த்து எழுதப்படுகின்றது.  
 
 ஃப்யூஷன் 
 டிசைன்கள்  
 ஃபிரைடு 
 ரைஸ்  
 ஃபேன்கள் 
  
  | 
  
  
 |  
  
 5.4.2 மெய் 
  
  | 
  
  
 |  
  
     தமிழ் இலக்கண மரபின்படி, மெய்ம்மயக்கங்கள் (இரண்டு 
 மெய் ஒலிகள் இணைந்து வருதல்) மொழிக்கு
 முதலில் வராது. இது தமிழுக்கே உரிய சிறப்பாகும். ஆனால் விளம்பரங்களிலோ இவ்விதி
 மீறப்பட்டுள்ளது,  
  
 க்ரீம்; 
 ச்யவன பிராஷ்; ப்ரொடக்ட்ஸ்; ப்ரூ காபி; 
 ட்ராலி சூட்கேஸ்; த்ரீ ரோஸஸ்; வ்யாஸ முனிவர்
  
  
 மொழியின் 
 இடையிலும் கடையிலும் கூட வழக்காற்றினை மீறிய
 ஒவ்வாத மெய்ம்மயக்கங்கள் விளம்பர மொழியில் 
 இடம்பெறுகின்றன.  
  
 இடையில்: 
 போர்ன்விடா 
 கடைசியில்: 
 லக்ஸ்; மார்க் 
  
  | 
  
  
 |  
  
 5.4.3 
 டகரம், ரகரம், லகரம்   
  | 
  
  
 |  
  
     இலக்கண நூல்கள் டகரம், ரகரம், லகரம் ஆகியன மொழிக்கு முதலில் 
 தமிழில் வாரா என்று உரைக்கின்றன. ஆனால்
 விளம்பரத் தமிழில் அவை மொழிக்கு 
 முதலில் இடம் பெறுகின்றன.  
 
 - 
 
டயர், 
 டாக்டர், டோக்கன், டேப் ரெகார்டர், டொமாட்டோ
 சாஸ், டீலர், டூத் பேஸ்ட்   
 - 
 
ரீஃபில் 
 பேக், ருசி, ரெப்ரிஜிரேட்டர், ரேசர், ரொக்கப் பரிசு  
 - 
 
லக்ஸ், 
 லுங்கி, லிப்டன் டீ, லூப்ரிகேட் ஆயில், லைம் லைட்,
 லேபரட்டரீஸ்  
  
  | 
  
  
  |