பிறமொழித் திரைப்படங்களின் ஒலியமைப்பினை மாற்றாமல்,
திரைப்படம் திரையில் தெரியும்போது, அந்தக் காட்சிக்குரிய
பாத்திரங்களின் தமிழாக்கப்பட்ட உரையாடலைத் தமிழ் எழுத்து
வடிவில் திரையில் இடம் பெறச் செய்வது திரைப்படச் சார
மொழி பெயர்ப்பு (sub-title translation) ஆகும்.
திரைப்படத்தின் கதைப்போக்கு, உரையாடலுக்கேற்ப,
திரைப்படச் சார மொழிபெயர்ப்பு அமைந்திருத்தல் வேண்டும்.
திரையில் தெரியும் காட்சியில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களின்
பிற மொழிப் பேச்சினைத் தவிர்த்து விட்டு, தமிழ் எழுத்து
வடிவத்தினையும் காட்சியையும் ஒருங்கிணைத்துக் காண்பதன்
மூலம் திரைப்படத்தினை விளங்கிக் கொள்ளலாம்.
கலைத்
தன்மையுடைய சிறந்த திரைப்படங்கள், தமிழில் சார
மொழி பெயர்ப்பின் மூலம் திரையிடப்படுகின்றன. இந்திய
அரசின் முயற்சி காரணமாகத் தேசிய
விருது பெற்ற
திரைப்படங்கள், தமிழ்ச் சார
மொழிபெயர்ப்புடன்
திரையிடப்படுகின்றன. இதனால் தமிழ் மட்டும் அறிந்துள்ள
பார்வையாளர்கள் பிற மொழிப் படங்களின் அமைப்பினையும்
சிறப்பினையும் அறிய இயலும்.
|
மூல மொழித் திரைப்படத்தின் கதை-உரையாடல் பிரதியைத்
தமிழில் வெளியான சார மொழிபெயர்ப்புடன் ஒப்பிடும்போது
மொழியமைப்பினைப் புரிந்து கொள்ளலாம். தேசிய விருது
பெற்ற பிறமொழித் திரைப்படங்கள் பெரும்பாலும் மும்பை,
புதுதில்லி போன்ற நகரங்களிலிருந்து சார மொழிபெயர்ப்புச்
செய்யப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள் தமிழின்
நடைக்குப் பொருத்தமற்றுக் கரடுமுரடாக உள்ளன.
இவ்வாறு
மொழிபெயர்க்கப்படும் தமிழ்ப் பிரதிகளுடன் மூலப்
பிரதியை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம்
தமிழ் நடை,
தொடரமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறியலாம்.
|