3.
தொடக்கக் காலத்தில் திரையரங்குகளில் பேசிய மொழி
பெயர்ப்பாளர்களின் செயற்பாடு பற்றி விளக்குக.
திரைப்படங்கள்,
அரங்குகளில் திரையிடுவதற்கு முன்னர்,
மொழி பெயர்ப்பாளர்கள், திரைப்படத்தினைக் காண்பதுடன்,
உரையாடலையும் மொழி பெயர்த்துக் கொண்டனர். பின்னர்
திரையரங்குகளில் பிறமொழித்
திரைப்படங்கள்
திரையிடப்பட்டபோது, மொழிபெயர்ப்பாளர்கள்
பார்வையாளர்களின் முன்னர் தோன்றி, படத்தின்
கதைச்
சுருக்கத்தைத் தமிழில் கூறுவதுடன்
அவ்வப்போது
உரையாடல்களையும் தமிழில் கூறினர். இதற்காக
ஒலி
பெருக்கியினையும் பயன்படுத்தினர். இத்தகைய
வசதி,
நகரத்தில் அமைந்திருந்த, சில திரையரங்குகளில்
மட்டும்
இருந்தன. அனைத்துத் திரையரங்குகளிலும் இருக்கவில்லை.
மேலும் நாளடைவில் திரையரங்குகளின்
எண்ணிக்கை
பெருகியது. இந்நிலையில் இருமொழிகள் அறிந்த
மொழி
பெயர்ப்பாளர்கள் அதிக அளவில் கிடைக்காத காரணத்தினால்,
காலப்போக்கில் மொழிபெயர்ப்பு முயற்சி நின்று போனது.
|