4.
மொழி மாற்றம் (Dubbing) - சிறு குறிப்பு வரைக.
திரைப்படமானது
கலை என்ற நிலையைக் கடந்து, ஏராளமான
பொருளீட்டுவதற்கான வாய்ப்பாக
மாறியதால்,
தயாரிப்பாளர்கள், ஒரு மொழியில்
தயாரிக்கப்பட்ட
திரைப்படத்தினைப் பிற மொழிகளில் மொழி
மாற்றம்
(Dubbing) செய்யத் தொடங்கினர். உலகமெங்கும் சந்தையை
விரிவுபடுத்த வேண்டுமெனில் மொழி மாற்றம் அவசியம்
என்பதை அறிந்து கொண்டனர். புதிய தொழில்நுட்பம்,
இயந்திரங்களின் மூலம் மொழி மாற்றம்
(Dubbing)
செய்வதனை ஊக்குவித்தது.
இதனால்
ஒரு மொழி பேசிய திரைப்படம், இன்னொரு
மொழிபேசும் திரைப்படமாக மாற்றமடைவது எளிதானது.
நாளடைவில் ‘மொழி மாற்றம்’ என்பது பெரும் வீச்சாகப்
பரவியது.
|