தன்மதிப்பீடு : விடைகள் - II

 

2. மொழி மாற்றத்தில் உதட்டசைவு, உடலியக்கம் பற்றி நும் கருத்தை எழுதுக.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யும்போது உதட்டசைவு, ஓரளவு தொடர் அமைப்புகள் பொருந்தி வர வாய்ப்புண்டு. ஏனெனில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியன திராவிட மொழிக் குடும்பத்தினைச் சார்ந்தவை ஆதலால், ஏவல் வினைகள், ஓரே வேர்ச் சொல்லினை மூலமாகக் கொண்டிருக்கும். எனவே சில சொற்கள் திராவிட மொழிகளுக்குள் பொதுவாக இருக்க வாய்ப்புண்டு அல்லது சிறிய வேறுபாடுகளுடன் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஆங்கிலம், ஹிந்தி மொழிகளின் சொற்கள், தொடரமைப்புகள் தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டவை. எனவே அவை தமிழில் மொழி     மாற்றம் செய்யப்படும்போது, உதட்டசைவு, உடலசைவுக்கு முற்றிலும் பொருந்தி வராது.

முன்