| 3.5 மாணிக்கவாசகர் | 
     
      E 
     | 
    
| 
     
      பன்னிரு  திருமுறைகளுள் எட்டாம்
      திருமுறையாகத்  தொகுக்கப்பட்டுள்ளது
      மாணிக்கவாசகரின் திருவாசகம். இவரே
      இயற்றியதாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலக்
      கோவையாரும் எட்டாம் திருமுறையாகக்
      கொள்ளப்பட்டு வருகிறது.
     
     | 
    |
| 
      மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய
      பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும்
      பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். இயற்பெயர்
      திருவாதவூரர். பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’
      என்ற பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக
      விளங்கினார். மன்னன் அளித்த பொருளை இவர் குதிரை
      வாங்கப் பயன்கொள்ளாது திருப்பெருந்துறை (ஆவுடையார்
      கோயில்) திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார்.
      சிவபெருமான் குருவடிவம் காட்டி இவரைக் குருந்த மர நிழலில்
      ஆட்கொண்டான்.
     
     | 
  |
| 
     
      அக்காலை இவர் பாடிய பனுவல்களே
      திருவாசகம். இறைவன்  இவருக்கு மாணிக்கவாசகர்  என்னும் திருநாமம்
      சூட்டினார்.
     
     | 
  |
| 
      நரி பரியானது, வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது,
      இறைவன் பிரம்படிபட்டது, பௌத்தர்களோடு வாதிட்டது,
      தில்லைப் பொன்னம்பலத்தில் இறைவன் தாள் மலர்களில்
      கலந்தது என்பன இவரது வாழ்வியல் அற்புதங்களாகும். ஆனி
      மக நாளில் இவர் இறையடிகளில் கலந்தார். இவ்வுலகில்
      இவர் வாழ்ந்த காலம் 32 ஆண்டுகள். 
     | 
  |
| 
     
      இவர் காலம் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குப் பிற்பட்டது
      என்பதே ஆய்வாளர் முடிவு. இவர் தேவார மூவருக்கு
      முற்பட்டவர் என்றும் சிலர் கூறியுள்ளனர். 
     | 
    
    
     |