சோழவளநாட்டில்
வரலாற்றுச் சிறப்பு
மிக்க பழம்பதிகளுள்
ஒன்று
திருமறைக்காடு.
வேதாரண்யம்
என்று வடமொழியாளர்
இந்நகரை
அழைத்தனர். இந்நகரில்,
சுத்த சைவ வேளாளர்
மரபில் மீனாட்சி
சுந்தர தேசிகர்
என்பாரின்
மகனாகப் பரஞ்சோதி
முனிவர்
பிறந்தார். மதுரையில்
சற்குருவை அடைந்தார்.
அவரிடம்
ஞானோபதேசம்
பெற்றுச்
சைவ
சந்நியாசம்
பூண்டார். மதுரை
அருள்மிகு மீனாட்சியம்மை
இவர் கனவில்
தோன்றி மதுரையில்
சிவ பெருமான்
நிகழ்த்திய
திருவிளையாடல்களைப்
பாடுமாறு
பணித்தார். ‘சத்தியாய்’
என்ற மங்கல
மொழியில் தொடங்கி
64
திருவிளையாடல்களையும்
மதுரைக் காண்டம்,
கூடற் காண்டம்,
திருவாலவாய்க்
காண்டம் என்ற
மூன்று காண்டங்களாக
3363
செய்யுள்களில்
பெருங்காப்பியமாகத்
திருவிளையாடற்
புராணத்தைப் பரஞ்சோதி
முனிவர் பாடி
, அருள்மிகு
சொக்கநாதர்
சந்நிதியில்
அரங்கேற்றம்
செய்தார். மேலும்,
இவரால் மதுரை
அறுபத்து நான்கு
திருவிளையாடல்
போற்றிக் கலிவெண்பா,
மதுரை பதிற்றுப்பத்தந்தாதி,
வேதாரணிய
புராணம் என்பனவும் பாடப்பெற்றுள்ளன.
வேதாரணியத்திற்கு
அருகில்
பரஞ்சோதிபுரம்
என்ற ஒரு சிற்றூர்
உள்ளது. அங்குள்ள
சிவாலயத்தில்
இம்முனிவரின்
திருவுருவச் சிலை
ஒன்று உள்ளது.
சேது புராணம்
பாடிய நிரம்ப அழகியதேசிகர்,
அதிவீரராமபாண்டியர்.
பலபட்டடைச்
சொக்கநாதப்புலவர்
ஆகியோருடன்
இவர் வரலாற்றை
இணைத்துக்கூறுவர்.
இவர்
காலம் இற்றைக்கு
300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகத்
தெரிகிறது.
6.2.2 மதுரைத்
தலம்
இந்தியத்
தொல் நகரங்களுள்
ஒன்று மதுரை. சிவராஜதானியாக
விளங்கும் சிறப்பு
மிக்க நகரம்
இது. திட்டமிட்ட
நகர் அமைப்பு
இங்கே காணப்படுகிறது,
மூன்றாவது தமிழ்ச்
சங்கம் இங்கே
நிலவியிருந்ததாக
இறையனார் களவியல் என்ற நூல் உரையில்
குறிப்புகள் உள்ளன.
வியாசர் பாரதத்தில்
மதுரையை ஆண்ட
பாண்டியர் பற்றிய
குறிப்புகள்
உள்ளன, தமிழ்த்
தொன்னூல்களான
பரிபாடல்,
திருமுருகாற்றுப்படை முதலியவற்றில்
மதுரை குறிக்கப்பட்டுள்ளது.
அறுபடை
வீடுகளுள் திருப்பரங்குன்றமும்,
பழமுதிர் சோலையும்
இந்நகரைச் சார்ந்து
அமைந்துள்ளன.
மதுரைத் திரு
க்கோயில்
மிகப்பெரியது.
அழகிய கட்டுமானம்
கொண்டது. அற்புதச்
சிற்பங்கள்
நிறைந்தது. இத்தலத்து
இறைவி அங்கயற்கண்
அம்மை. மீனாட்சி
என்பதே பெரு வழக்கு.
இறைவன் ஆலவாய்
அழகன். சோமசுந்தரர்,
சுந்தரேசுவரர்
என்பன வேறு பெயர்கள்.
தில்லையைப் போல்
இந்நகர் குறித்து
எழுந்த சமய
இலக்கியங்கள்
பலவாகும். சமயாசாரியர்
நால்வராலும்
பாடப்பெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம்
என்ற மூன்றாலும்
சிறப்புடையது. இத்தலத்தில்
சிவபெருமான்
நிகழ்த்திய
திருவிளையாடல்களை
அறுபத்து நான்கு
என்று குறித்துள்ளனர்.
மதுரையில் சிவபெருமான்
நிகழ்த்திய
திருவிளையாடல்கள் குறித்துப் பல
நூல்கள் தோற்றம்
கொண்டன. செல்வி
நகர்
பெரும்பற்றப்
புலியூர்
நம்பி
என்பார்
திருவாலவாயுடையார்
திருவிளையாடற்
புராணம் என்ற நூல் ஒன்றைப்
பாடியுள்ளார்.
|
 |
வீமநாத பண்டிதர்
கடம்பவன புராணம்
என்ற பெயரில்
ஒரு
புராணநூல் மதுரையைக்
குறித்துப் பாடியுள்ளார்.
மதுரைக்குக்
கடம்பவனம் என்பது
ஒரு பெயர். இந்நூலுள்
இடம் பெற்றுள்ள
லீலா சங்கிரக
அத்தியாயம்
என்ற பகுதியில்
மதுரைத்
திருவிளையாடல்கள்
யாவும் சுருக்கமாகப்
பாடப்பெற்றுள்ளன.
அனதாரியப்பர்
என்பவர் மதுரைத்
திருவிளையாடல்களைத்
திரட்டிச் சுந்தர
பாண்டியம் என்ற
அழகிய நூலை
இயற்றியுள்ளார்.
வீரபத்திரக்
கம்பர் என்பவர்
திருவிளையாடல்
பயகர மாலை என்ற
பெயரில் ஒரு நூல்
பாடி வழங்கியுள்ளார்.
வடமொழியிலும்
மதுரைத்
திருவிளையாடல்களை
விரித்துரைக்கும்
ஆலாசிய மான்மியம்
என்ற நூல் ஒன்று
உள்ளது. இதன்
தமிழ் மொழி
பெயர்ப்பு என்றே
பரஞ்சோதியாரின்
திருவிளையாடற்புராணம்
கூறப்படுகிறது.
என்றாலும், கம்பனைப்
போல், வடமொழிச்
சாயல் இன்றிப்
பரஞ்சோதி முனிவர்
தமிழ் நலம்
சிறக்க முதல்
நூலாகவே
திருவிளையாடற்
புராணத்தைப் பாடி
வழங்கியுள்ளார்.
6.2.4 காப்பிய
உறுப்புகளும் திருவிளையாடற்
புராண அமைப்பும்
முதற்கண் நிற்கும்
மதுரைக் காண்டம்
தொடங்கப் படுவதற்கு
முன்னதாகவே, காப்பிய
உறுப்புகள் பலவும்
முன்னே வரிசைப்
படுத்தப் பட்டுள்ளன.
காப்பிய
உறுப்புகள்
|
காப்பு வாழ்த்து
நூற்பயன் கடவுள்வாழ்த்து
பாயிரம் அவையடக்கம்
திருநாட்டுச்சிறப்பு
திருநகரச்
சிறப்பு திருக்கயிலாயச்
சிறப்பு புராண
வரலாறு தலவிசேடம்
தீர்த்தவிசேடம்
மூர்த்தி விசேடம்
பதிகம் |
|
எனப் பல பகுதிகள்
343 செய்யுட்களால்
விரித்துரைக்கப்பட்டுள்ளன.
இந்நூலைப் படித்தாலும்
படிக்கக்
கேட்டாலும் இன்பங்கள்
பல சேரும் என்று
நூற்பயன் கூறும்
பாடல் கூறுகிறது.
சமயம் மக்களுக்கு
நம்பிக்கையூட்டும்
மாபெரும் அமைப்பாகும்.
இந்த நம்பிக்கையே
சமய வாழ்வில்
அடித்தளம். இத்தகு
அறிவிப்புகள்
மனித மனஉறுதியை
வளர்ப்பதோடு,
துன்பங்களை எதிர்கொள்ளும்
வலிமையையும்
வழங்க வல்லன.
மதுரைக்
காண்டம்
|
கூடற்
காண்டம்
|
திருவாலவாய்க்
காண்டம் |
18 படலங்கள்
|
30 படலங்கள்
|
16 படலங்கள்
|
முதற்கண்ணதாகிய
மதுரைக் காண்டம்
18 படலங்களைக்
கொண்டு அமைந்துள்ளது.
இரண்டாவதாகிய
கூடற் காண்டத்தில்
30 படலங்களும்
மூன்றாவதாகிய
திருவாலவாய்க்
காண்டத்தில்
16 படலங்களும்
இடம் பெற்றுள்ளன.
6.2.5 திருவிளையாடற்புராணம்
- வாழ்த்து
திருவிளையாடற்புராணம்
அழகிய விநாயகர்
காப்புச் செய்யுள்
ஒன்றுடன் தொடங்குகின்றது.
|
சக்தி
யாய்ச்சிவ
மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத்
துதிசெயச்
சுத்தி யாகிய
சொற்பொருள்
நல்குவ
சித்தி யானைதன்
செய்யபொற்
பாதமே |
 |
(காப்பு)
|
சிவனே, சக்தியாகவும்,
சிவமாகவும்
பிரிந்து நின்று
முத்திப் பேறு
அருளும் முதல்வனாகத்
திகழ்கின்றான்
என்பது பாடல் கருத்து.
சைவ சமய நூல்கள்
பலவும் இம்மை
மறுமை இன்பங்களுக்கு
மட்டும் வழிகாட்டுவனவாக
அமையாது, உலக
நலம் குறித்த
உயர் சிந்தனைகளையும்
கொண்டு இயங்குவன.
வேதங்கள்
சிறக்கவேண்டும்;
மேகங்கள்
கருணை கூர்ந்து
மழைவளம்
தருதல் வேண்டும்;
உலகெலாம் பலவளங்களும்
பெருகவேண்டும்;
அறங்கள் எங்கணும்
பரவிடல்
வேண்டும்;
உயிர்க்குலங்களுக்கெல்லாம்
இன்பம் சிறத்தல்
வேண்டும்;
மன்னன் செங்கோல்
ஆட்சி சிறத்தல்
வேண்டும் என்றெல்லாம்
பரஞ்சோதி முனிவரும்
வாழ்த்தி மகிழ்கிறார்.
|
மல்குக
வேத வேள்வி
வழங்குக சுரந்து
வானம்
பல்குக வளங்கள்
எங்கும்
பரவுக அறங்கள்
இன்பம்
நல்குக உயிர்கட்கு
எல்லாம்
நான்மறைச்
சைவம் ஓங்கிப்
புல்குக உலகம்
எல்லாம்
புரவலன் செங்கோல்
வாழ்க |
 |
(வாழ்த்து)
|
இத்தகு அரிய
பாடல்கள்
சைவம், சமூக
நலநாட்டமிக்க
மாபெரும் விரிவு
கொண்டிருந்தமையை
உறுதி செய்கின்றன.
6.2.6 அருள்
வரலாறுகள் சில
•
மாணிக்கவாசகர்
அருள் வரலாறு
திருவிளையாடற்புராணம்
மிக விரிவாக
மாணிக்க வாசகர்
அருள்
வரலாற்றை,
1. வாதவூரடிகளுக்கு
உபதேசித்த படலம்
2. நரி பரியாக்கிய
படலம்
3. பரி நரியாக்கிய
படலம்
4. மண் சுமந்த படலம்
என்ற நான்கு
படலங்கள் வாயிலாக
ஆசிரியர் மிக
விரிவாகக்
கூறியுள்ளார்.
மாணிக்கவாசகரின்
முழுமையான வரலாற்றை
உணர்ந்து கொள்வதற்குத்
திருவிளையாடற்
புராணமே நமக்குத்
துணை நிற்கிறது.
மாணிக்கம்
விற்ற படலத்தில்
இவர்
நவரத்தினங்களின்
வகைகளையும்,
நரி பரியாக்கிய
படலத்தில்
பல்வேறு குதிரைகளின்
இலக்கணங்களையும்
விரித்துரைக்கும்
பகுதி இவரது உலகியல்
அறிவுக்கும், பல்துறைப்
புலமைக்கும்
சான்று கூறி நிற்கின்றன.
• தருமிக்குப்
பொற்கிழி அளித்த
படலம்
பரஞ்சோதி முனிவரின்
இத்திருவிளையாடற்
புராணத்தில்
இடம்
பெற்றுள்ள தருமிக்குப்
பொற்கிழி
அளித்த படலம்
அனைவரையும் எளிதில்
கவரும் தன்மை
கொண்டது.
‘கொங்குதேர்
வாழ்க்கை அஞ்சிறைத்
தும்பி’என்று
தொடங்கும்
ஒரு குறுந்தொகை
அகப்பாடலை அடிப்படையாகக்
கொண்டு அற்புதமாக ஆசிரியர்
இக்கதையை நடத்துகிறார்.
கற்பனையும்,
வருணனையும் சிறந்திலங்கும்
பகுதி இது.
6.2.7 ஆசிரியரின்
தமிழ்க் காதல்
தமிழ்வளர்த்த மதுரையில்,
செந்தமிழ்ச்
சொக்கன்
திருவிளையாடல்களை
விரித்துரைக்கும்
இந்நூலுள் பரஞ்சோதி
முனிவர் தமிழ்
மொழியின் பெருமையைப்
பலபட எடுத்துரைத்து
மகிழ்கிறார்.
சிவபெருமானே
சங்கத்தில்
இடம் பெற்று ஆராய்ந்த
சிறப்புடையது
தமிழ் மொழி.
இதனை இலக்கண
எல்லைகள் கூட
இல்லாத உலக
மொழிகளுக்குள்
ஒன்றாக எண்ணுதல்
பொருந்தாது. இதனைத்
தனித்து நிறுத்திப்
போற்ற வேண்டும்
என்பது ஆசிரியரின்
உள்ளமாகிறது.