ஏறக்குறைய
இரண்டாயிரம் ஆண்டுக்கால நீண்ட வரலாற்றை
உடையது தமிழ் இலக்கியம். இன்று கிடைத்திருக்கும் நூல்களுள்
தொல்காப்பியமே மிகத் தொன்மையானது எனலாம். எழுத்துக்கும்
சொல்லுக்கும் மட்டுமன்றி வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட
பெருமைக்கு உரியது தொல்காப்பியம். வேறு எந்த மொழிக்கும்
இல்லாத தனிச்சிறப்பு இது என்று பெருமைப்படலாம். இதுவரை
கிடைத்திருக்கும் நூல்களில் மிகப் பழமையான நூலே இலக்கணம்
என்றால் அதற்கு முன் இலக்கியங்கள் பெருகியிருக்க வேண்டுமல்லவா? எள் இல்லாமல் எண்ணெய் இல்லை; இலக்கியம்
இல்லாமல் இலக்கணமில்லை!
1.2.1
தொல்காப்பிய ஆசிரியர் சமணர்
|
தொல்காப்பியரின் சமயம் இன்னதென்று திட்டமாகத்
தெரியவில்லை என்றாலும் தொல்காப்பியம் சமண நூல்
என்பாரும்
தொல்காப்பியர் சமணர் என்பாரும் உளர்.
தொல்காப்பியன்
எனத்தன் பெயர் தோற்றிப் |
பல்புகழ்
நிறுத்த படிமையோனே |
(வரிகள்:
14-15)
|
என்று பனம்பாரனார் பாயிரம் தொல்காப்பியரைப்
புகழ்கிறது.
அதாவது தவத்தால் வரும் பல்புகழினை உலகிலே நிறுத்தின
தவவொழுக்கத்தினை
உடையவன் என்று பொருள்படும்.
 |
படிமையோன் |
படிமையோன்
என்றால் தவம் செய்பவன் என்று
பொருள்.
சமண வழக்கில் படிமை என்ற சொல்
துறவியின் தவவொழுக்கத்தைக் குறிக்கும்.
அதனால் படிமையோன் என்ற சொல்லால்
குறிப்பிடப்பட்ட
தொல்காப்பியர் சமணர் என்று
கொள்ளலாம்.
 |
முதல் நூல் |
மற்றுமொரு காரணம் உள்ளது. முதல்
நூலைப்
பற்றி மரபியலில் குறிப்பிடும்போது,
வினையின்
நீங்கி விளங்கிய அறிவின் |
முனைவன்
கண்டது முதல் நூலாகும். |
(தொல்.மர:640)
|
என்பார். அதாவது சமண
தீர்த்தங்கரர் தவத்தினை ஆற்றி,
பற்றினை நீக்கிக் கேவலஞானம் பெறுவர். கேவலஞானம் என்ற
வடசொல் ‘வினை நீங்கிய நிலையிலான அறிவு’ என்று பொருள்படும்.
‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்’ என்பது அருகதேவனைக் குறிக்கும். சமண சமயத்தார், முதல் தீர்த்தங்கரராகிய
விருஷபதேவரே முதல் நூலை இயற்றியவர் என்பர்.
அதனால்
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது
முதல் நூல் என்று கூறியிருப்பதால் தொல்காப்பியரும் சமணராக
இருக்கலாம். இக்கருத்தை மறுப்பாரும் உளர்.
1.2.2
தொல்காப்பியத்தில் சமணக் கொள்கைகள்
|
தொல்காப்பியத்தில் சமண சமயக் கொள்கைகள் இடம்
பெற்றுள்ளதைச் சான்றுகள் மூலம் அறியலாம்.
 |
காஞ்சித்திணை:
நிலையாமைக் கொள்கை! |
நிலையாமைக் கொள்கை எல்லாச் சமயத்தாராலும்
பேசப்படுவதுதான் என்றாலும் சமண சமயத்தார்க்கே சிறப்பாக
உரியது எனலாம். இக்கொள்கையைத் தொல்காப்பியர்
காஞ்சித்திணை என்று தனியாகக் குறிப்பிடுகிறார்.
காஞ்சிதானே
பெருந்திணைப்புறனே |
பாங்கருஞ்
சிறப்பின் பல்லாற் றானும் |
நில்லா
உலகம் புல்லிய நெறித்தே |
(புறத்திணையியல்:18)
|
(பாங்கு = ஒப்பு, நில்லா = நிலையில்லா, புல்லிய = தாழ்ந்த,
இழிந்த, நெறி = வழி)
பல வகைகளிலும் ஒப்பில்லாத பண்புகளையுடையதாகக் கருதப்படும்
இவ்வுலகின் நிலையற்ற
போக்கினை விளக்குவது பெருந்திணைக்குப்
புறமாக அமைந்துள்ள காஞ்சித்திணை என்பது இவ்வடிகளின்
பொருளாகும். (பெருந்திணை என்பது அகத்திணை ஏழனுள் ஒன்று.
பொருந்தாத
காதல் என்று இதை விளக்கலாம்.)
 |
னகர ஈற்று
விளக்கம்: ஆண்களுக்கே வீடுபேற்று உரிமை! |
தமிழ் எழுத்துகளுள் னகரம் இறுதி எழுத்தாகும். னகரத்தை
இறுதியிலே வைத்ததற்குக் காரணம்
காட்டுகிறார் இளம்பூரணர்
என்ற உரையாசிரியர்.
னகரம்
வீடுபேற்றிற் குரிய ஆண்பாலை |
உணர்த்துதற்
சிறப்பான் பின் வைக்கப்பட்டது |
(தொல்,
எழுத்து 1. இளம்பூரணர் உரை)
|
ஆண்பிறவி எடுத்து, துறவு பூண்டு தவத்தினைச் செய்து
வினைகளை வென்றால்தான் வீடுபேறு
அடைய முடியும் என்பது
சமணர்தம் கோட்பாடு. அதனைக் குறிக்கவே ஆண்பால் ஈற்று
எழுத்தாகிய
னகர மெய்யை மொழி இறுதியில் தொல்காப்பியர்
வைத்தார் என்பது இளம்பூரணர் கருத்து.
இளம்பூரணரும் சமணர்
என்பதால் இயல்பாக இக்கருத்தை ஏற்றுக் கொண்டு விளக்கம்
தருகிறார்.
 |
படைப்பு
விளக்கம்: உலகம் படைக்கப்படுவதும்
இல்லை; அழிந்துபடுவதும் இல்லை |
உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று பல
சமயத்தாரும் கூறுவர். ஆனால் சமணரோ இவ்வுலகம் கடவுளால்
படைக்கப்பட்டது
அல்ல என்று கூறுவர். அது எப்போதும் இருந்து
கொண்டு இருக்கிறது; மாற்றங்களுக்கு உட்படுகிறது; ஆனால்
முழுவதுமாய் அழிந்துபடுவதில்லை என்கிறது சமண சமயம்.
தொல்காப்பியரும்
நிலம்
நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் |
கலந்த
மயக்கம் உலகம் |
(மரபியல்
- 91)
|
(வளி = காற்று, விசும்பு = ஆகாயம், மயக்கம் = கலப்பு)
என்று குறிப்பார். இது சமணக் கொள்கையை ஒத்துள்ளது.
 |
கால அளவு:
மாத்திரை |
காலஅளவு பற்றிக் குறிப்பிடும்போது மாத்திரை இடம்
பெறுகிறது. மாத்திரைக்கு அளவுகளாக கைந்நொடியையும், கண்
இமைத்தலையும்
தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (எழுத்து - 7). இதுவும் சமணர்தம் கருத்தோடு
ஒத்துப் போகிறது.
 |
பண்ணத்தி;
சமணச் செய்யுள் வகை |
உரையும்
பாட்டுமாகச் செய்யப்படும் ஒருவகைச் செய்யுள்
பண்ணத்தி எனப்படும். இச்செய்யுள் வகையைத் தொல்காப்பியர்
குறிப்பிடுகிறார் (செய்யுளியல் 173). சமணர்கள்
இயற்றிய பழைய
செய்யுள் வகையொன்றின் பெயராகப் பண்ணத்தி என்பது வழங்கப்படுகிறது. அதைப் பின்பற்றியோ அல்லது அது தம் சமயச்
சார்பானது என்று கருதியோ அவர் அதைக்
குறித்திருக்கலாம்.
 |
சமண சமயத்தின்
இடம் |
இலக்கியங்களில் ஒரு கருத்து இடம் பெற வேண்டுமென்றால்
சமூகத்தில் அது வேர் கொண்டிருந்திருக்க வேண்டும்.
இல்லையேல்
அதைப்பற்றிக் குறிப்பிட
வேண்டிய தேவை இலக்கியங்களுக்கு
இருந்திராது. எனவே தொல்காப்பியர் காலத்திலும்
அதற்கு முன்பும்
தமிழகத்தில் சமணம் இருந்திருக்க வேண்டும்;
சமணச் சார்பான
கோட்பாடுகள்
மக்களிடையே பரவியிருந்திருக்க
வேண்டும் என்ற
முடிவுக்கு வரலாம்.
|