2 - விடை
2 திருக்குறளுக்கு அடுத்து அறநூல்களில் சிறப்புப் பெறும் நூல் எது? அதன் சிறப்புக்குரிய காரணம் யாது?

திருக்குறளுக்கு அடுத்து அறநூல்களில் சிறப்புப் பெறும் நூல் நாலடியார் ஆகும். திருக்குறளோடு ஒப்ப வைத்து நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனப் பாராட்டவும் படுகிறது. சமண சமய அறங்களைக் கூறினாலும் அவை திருக்குறள் கூறுவதைப் போலப் பொது அறங்களாக இருப்பதும் அதன் சிறப்பிற்கான காரணம் எனலாம்.