![]() |
கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான பழந்தமிழக வரலாற்றில் செல்வாக்குப் பெற்றிருந்த சமயங்கள் பல. அவற்றுள் பௌத்த சமயத்திற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. ஆறாம் நூற்றாண்டு வரையிலான பழந்தமிழ் நூல்களை, சங்ககாலம், சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் இரு காலகட்டங்களிலும் தோன்றிய நூல்கள் என்று பகுத்துக் கொள்ளலாம். இப்பாடத்தில் பௌத்த சமயத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாகத் தமிழகத்தில் வேரூன்றிச் சில நூற்றாண்டுகள் செல்வாக்குப் பெற்று விளங்கியபின் தன் சிறப்பினை இழந்த சூழலையும் படிக்கவுள்ளோம். அத்துடன் பழந்தமிழ் நூல்களில் பௌத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கைப் புலப்படுத்தும் குறிப்புகளையும் அறிய உள்ளோம். |