சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காலத்தை, சங்கம் மருவிய காலம்
என்பர். சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகிய
காப்பியங்கள் இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களாகும்.
ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம்
முதன்மையானது;
குடிமக்கள் காப்பியமாகத் திகழ்வது. இக்காப்பியத்தில் காணப்படும்
குறிப்புகள் சில பௌத்த சமயம் தமிழகத்தில் பெற்றிருந்த இடத்தை
அறிந்து கொள்ளச் சான்றாகின்றன. அவற்றை
இப்போது
காணலாமா?
இந்திரவிழவூர் எடுத்த காதை
என்னும் பகுதியில் புகார்
நகரின் சிறப்பும் அவ்வூர் மக்கள் இந்திரவிழாக்
கொண்டாடிய
சிறப்பும் கூறப்படுகிறது. பல்வேறு வழிபாடுகளும் விழாக்களும் ஊர்
முழுவதும் நிகழ்வதை விரிவாகப் பேசுகிறார் இளங்கோவடிகள்.
பிறவா யாக்கைப் பெரியோன் (சிவன்) முதல் வேறு வேறு கடவுளர்
திருவிழா ஒரு பக்கம் சிறந்திருந்தது.
மற்றொரு புறமோ
அறவோர்களின் பள்ளியிலும் அறம்போற்றும் அறச்சாலைகளிலும்
மதிற்புறத்தேயுள்ள புண்ணியத்தானங்களிலும் அறத்தினை
உணர்ந்தோர் தருமம் உரைக்கும் செயல் சிறந்து நின்றது
என்று
கூறுகிறார்.
அறவோர் பள்ளி என்பது சமணப்பள்ளிகளையும்
பௌத்தப்
பள்ளிகளையும் குறிக்கும் என்றாலும் அறவோர் என்பது இங்கு
பௌத்தத் துறவியரைக் குறிப்பிடுகிறது. பள்ளிகளெங்கும் தருமம்
உரைக்கும் செயல் சிறந்து நின்றது என்ற குறிப்பின்
வாயிலாக,
பௌத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கையும் அனைத்துச்
சமயங்களும் மேலோங்கியிருந்த தன்மையையும்
அறிந்து கொள்ளலாம். இக்குறிப்பை உணர்த்தும் வரிகள்:
அறவோர்
பள்ளியும் அறன்ஓம்படையும் |
புறநிலைக்
கோட்டத்துப் புண்ணியத் தானமும் |
திறவோர்
உரைக்குஞ் செயல்சிறந்து ஒருபால் |
(இந்திரவிழவூர்
எடுத்தகாதை 5:179-181) |
எல்லாச் சமயத்தாரும் வேறுபாடின்றி இணக்கத்துடன்
இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதும்
விழாக்காலங்களில்
அனைவரும் ஒன்றிணைந்து தத்தம் சமய நம்பிக்கை அடிப்படையில்
செயல்களை மேற்கொண்டனர் என்பதும் தெளிவாகிறது.
 |
இந்திர விகாரங்கள் |
மற்றொரு சான்று: நாடுகாண் காதையில் கோவலனும்
கண்ணகியும் கவுந்தியடிகளோடு மதுரையை நோக்கிப் பயணம்
மேற்கொண்டபோது, வழியில் பற்பல கோட்டங்களைக்
கடந்து
செல்கின்றனர். கோட்டம் என்றால் கோயில். அப்படிப் பல
கோயில்களைக் காணும்போது அவற்றை வலம்வந்து கடந்து
போகின்றனர். அவற்றுள் ஒன்று மணிவண்ணன்
கோயில்.
ஆதிசேடனாகிய பாம்பணையில் அறிதுயில் துயிலும் மணிவண்ணன்
கோயிலை வலம் செய்து தம் பயணத்தைத் தொடர்கின்றனர்.
அதன்பின் இந்திரவிகாரங்கள் ஏழினையும் முறையே தரிசனம்
செய்து, அவற்றையும் கடந்து செல்கின்றனர். இந்திரவிகாரங்கள்
எனப்படுவது பௌத்தசமயக் கோயில்களாகும். அக்கோயில்களின்
சிறப்பைக் கூறவந்த
இளங்கோவடிகள்
பணை
ஐந்து ஓங்கிய பாசிலைப்போதி |
 |
அணிதிகழ்
நீழல் அறவோன் திருமொழி |
அந்தரசாரிகள்
அறைந்தனர் சாற்றும் |
இந்திரவிகாரம்
ஏழுடன் போகி |
(நாடுகாண்
காதை: 11-14) |
(பணை = கிளை; பாசிலை = பசிய இலை; போதி = அரசமரம்;
அந்தரசாரி = வானில் உலவும் சாரணர்)
என்கிறார். அதாவது,
பெரிய கிளைகளையும் பசுமை நிறைந்த இலைகளையும் கொண்ட
அரசமரத்தின் அழகிய நிழலில் அமர்ந்து புத்த தேவன் அற
மொழிகளைக் கூறினார்; வானில் இயங்கும் சாரணர் (சிறு
தெய்வங்கள்) அந்த அறமொழிகளை அனைவர்க்கும் எடுத்துரைக்கின்றனர்; அவ்வாறு அவர்கள் கூறும் இடங்கள்
இந்திரவிகாரங்கள்
என்று அழைக்கப்பட்டன; அப்படிப்பட்ட இந்திர விகாரங்கள்
ஏழினைக்
கடந்து சென்றார்கள் (அவர்கள்) என்பது இதன் பொருள்.
மேற்கூறிய குறிப்பு பௌத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கை
நன்கு உணர்த்தும்
5.3.2
மணிமேகலையும் குண்டலகேசியும்
|
ஐம்பெருங்காப்பியங்களில்
மணிமேகலையும் குண்டலகேசியும்
பௌத்த சமயக் காப்பியங்களாகும். பௌத்த சமயக்
கோட்பாடுகளைப் பரப்பவே இயற்றப்பட்ட காப்பியங்கள். இவற்றை ‘பௌத்த சமயக்
காப்பியங்களும் பிறவும்’ என்ற பாடத்தில்
விரிவாகப் பார்க்கலாம். இவ்விரு காப்பியங்களும் தமிழ்ச் சமூகத்தில் பௌத்த சமயம் வேரூன்றி இருந்தமைக்கான
முக்கியச் சான்றுகளாகும்.
|