![]() |
பௌத்த சமயம் தமிழகத்தில் சிறந்து விளங்கியமையை வேறு சில சான்றுகளும் உறுதிசெய்கின்றன. இளம்போதியார், சீத்தலைச்சாத்தனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தமையும், அறவண அடிகள் போன்ற அறச்சான்றோர் இருந்தமையும், தருமபாலர் போன்ற துறவியர் கல்வியாளராகப் புகழ்பெற்றிருந்தமையும், புத்தமித்திரர், பெருந்தேவனார் போன்ற படைப்பாளர்கள் சிறப்புப் பெற்றிருந்தமையும் பௌத்த சமயத்தின் செல்வாக்கினை எடுத்துக் காட்டுகின்றன. தவிர, தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினம், நாகைப்பட்டினம், காஞ்சிபுரம், மதுரை, திருப்பாதிரிப் புலியூர், பூதமங்கலம் போன்ற பழம்பெரு நகரங்களில் பௌத்த சமயம் மேலோங்கியிருந்ததை இலக்கியங்கள் மூலமும் ஆங்காங்குக் கிடைக்கின்ற சிலைகள், சாசனங்கள், கல்வெட்டுகள் ஆகியன மூலமும் அறிந்து கொள்ளலாம்.
இவையனைத்தும் பௌத்தம் பெற்ற செல்வாக்கை
எடுத்துக் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. |