2.1
தமிழ் உரைநடை வளர்ச்சியும் கிறித்தவர்களும்
கிறித்தவர்கள்
வருகைக்கு முன்பே,
தமிழில் உரைநடை
இருந்தது. கல்வெட்டுகள், சாசனங்கள்,
பண்டை இலக்கிய
- இலக்கணங்களுக்கு
எழுதப்பட்ட
உரைகள் போன்றவை
உரைநடையில் அமைந்திருந்தன.
ஆயினும்,
தற்கால
உரைநடையின்
(Modern Prose) தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
ஐரோப்பாவிலிருந்து வந்த
கிறித்தவர்களும்,
இந்தியக்
கிறித்தவர்களும் முன்னோடிகளாக
அமைந்தனர்.
உரைநடை
வளர்ச்சிக்கு உதவியாக அச்சு
இயந்திரங்களைக்
கிறித்தவர்கள்
அறிமுகப்படுத்தினர்; அகராதிகளைப் படைத்தனர்; இதழ்களையும்
வெளியிட்டனர். இவை உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை
செய்தன.
ஓரளவிற்குப் படித்தவர்களும் புரிந்துகொள்ளக்
கூடிய
எளிய நடையில் கிறித்தவர்கள்
எழுதினர். பேச்சுத் தமிழைத்
தரப்படுத்தி, எழுதும்
தமிழாகச் சீர்மைப்படுத்தியவர்களும்
கிறித்தவர்களே. சொற்றொடர்களைச்
சங்கிலித் தொடர்போல்
எழுதி வந்த வழக்கை மாற்றி,
சந்தி பிரித்து,
பத்திபத்தியாக
அமைத்து எழுதியவர்களும் கிறித்தவர்களே.
2.1.1
கிறித்தவ உரைநடை முன்னோடிகள்
பேச்சுத்
தமிழுக்கு
உயிரூட்டி, பேச்சுத்
தமிழுக்கும்
செந்தமிழுக்கும் இடைப்பட்ட ஒரு நடையைத்
தேர்ந்தெடுத்துக்
கொண்டு கிறித்தவர்கள் தமிழை
வளப்படுத்தினர். இவ்வகையில்
ஹென்றிக்ஸ் அடிகள், தத்துவ போதகர்,
வீரமாமுனிவர்
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.
• ஹென்றிக்ஸ் அடிகள் (Henriques 1520-1600)
தொடக்கக்காலக்
கிறித்தவ உரைநடை நூல்கள்
பெரும்பாலும்
சமயம் சார்ந்தவை. ஐரோப்பிய
மொழிகளிலிருந்து
தமிழில்
பெயர்க்கப்பட்டவை. தம்பிரான் வணக்கம் என்னும்
நூல்
அச்சில் வெளிவந்த
முதல் தமிழ் நூலாகும். இதனை ஹென்றிக்ஸ்
அடிகள் 1578 இல்
வெளியிட்டார். இது
கிறித்தவ
வழிபாட்டு
நூலாகும். கிறித்தவ
அடியார்களின் வரலாற்றையும்
இவர்
எழுதியுள்ளார். இவரது
நடை எளிமையானது; மக்கள் பேசியும்
எழுதியும் வந்த மொழியை அடிப்படையாகக் கொண்டது.
•
தத்துவ போதகர் (1577-1656)
 |
இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவரது
இயற்பெயர் இராபர்ட் டிநொபிலி (Robert de
Nobili).
இவர் சமயம்
பரப்பத் தமிழகம்
வந்தவர்; இருபதுக்கும் மேற்பட்ட உரைநடை
நூல்களைத்
தமிழில்
எழுதியுள்ளார்; ‘தமிழ்
உரைநடையின் தந்தை’
எனவும் குறிப்பிடப்படுகிறார்; ‘ஞானோபதேசகாண்டம்’. |
‘ஆத்தும நிர்ணயம்’, புனர்ஜென்ம ஆட்சேபம்’,
‘நித்திய சீவன
சல்லாபம்’, தேவ
மாதா சரித்திரம்’
முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. மேலேகுறிப்பிட்ட அன்றிக்ஸின்
நடையில்
காணப்படும்
போர்ச்சுகீசியச் சொற்களை
இவர் தவிர்த்தார்.
இவர் நீண்ட
சொற்றொடர்களைப்
பயன்படுத்தி எழுதினார்.
ஆயினும் புரிந்து
கொள்வதற்கு வசதியாக எளிமையாக எழுதினார்.
•
வீரமா முனிவர் (1680-1742)
பழந்தமிழ்
உரைநடைக்கும் தற்கால
உரைநடைக்கும்
பாலமாக அமைந்தவர் வீரமா
முனிவர். இவரது இயற்பெயர்
ஜோசப் பெஸ்கி
(Joseph Besche).
இலக்கணம், அகராதி,
எழுத்துச் சீர்திருத்தம்
போன்ற
துறைகளில்
இவர் செய்த பணிகள்
உரைநடை வளர்ச்சிக்குப்
பெருமளவில் துணை செய்தன.
கற்றோருக்குச் ‘செந்தமிழ்’ நடையிலும், பாமரருக்குப் |
 |
பேச்சுத் தமிழை அடிப்படையாகக் கொண்ட ‘கொடுந்தமிழ்’ நடையிலும் இவர் எழுதினார். செந்தமிழ்
நடைக்கு எடுத்துக்காட்டாக ‘வாமன் சரித்திரம்’ என்ற கதையை எழுதினார். கொடுந்தமிழுக்கு
எடுத்துக்காட்டாக, பரமார்த்த குரு என்னும் கதையை எழுதினார். தற்காலப்
புனைகதை இலக்கியத்திற்கு முன்னோடியாக இக்கதை கருதப்படுகிறது. அக்கால மடாதிபதிகளின்
முட்டாள்தனத்தையும், அவர்களது சீடர்களின் அறியாமையினையும் நகைச்சுவையாக,
இக்கதையில் அவர் படைத்துள்ளார். வீரமா முனிவரைப் பின்பற்றிப் பலரும் தமிழில்
உரைநடை நூல்கள் எழுதினர். 2.1.2.
விவிலிய மொழிபெயர்ப்புகள்
விவிலிய
(Bible) மொழிபெயர்ப்புகள்
தமிழ் உரைநடை
வரலாற்றில் குறிப்பிடத்தக்க
இடத்தினைப்
பெறுகின்றன.
முதன்முதலாக சீகன்பால்கு (1683-1719) விவிலியத்தைத்
தமிழில்
மொழிபெயர்த்து
வெளியிட்டார். தரங்கம்பாடியில் அச்சுக் கூடமும்
நிறுவினார். இவரது நடை
பேச்சு வழக்கை
அடிப்படையாகக்
கொண்டது. இவருக்குப் பின் பெப்ரிஷியஸ் (1711-1796)
என்பவர் விவிலியத்தை முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.
கற்றோருக்கும் பாமரருக்கும் பயன்பட வேண்டும்
என்ற நோக்கில்
இவரது நடை அமைந்திருந்தது. இரேனியஸ் (1790-1838), ஹென்றி
பவர்
(1813-1885), ஆகியோர் செய்த
மொழிபெயர்ப்புகளும்
இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
இலங்கையில் ஆறுமுகநாவலர்
துணையோடு பெர்சிவெல் என்பவர்
செய்த மொழிபெயர்ப்பு
சிறப்புடையதாகும்.
கால்டுவெல்,
ஜி.யு.போப் போன்றோரும்
தமிழில் உரைநடை நூல்கள் எழுதியுள்ளனர்.
விவிலிய மொழிபெயர்ப்புகள் முக்கியமான
இரண்டு விவாதங்களை
எழுப்பின. அவை :- 1)
பேச்சு வழக்கைக் கையாள்வது பற்றியது
2) சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவது பற்றியது.
இந்த விவாதங்கள் 19ஆம்
நூற்றாண்டின் இடைப்பகுதியில்
எழுந்தன. இக்காலப்
பகுதியில் மணிப்பிரவாள
நடைக்குச்
செல்வாக்கு இருந்தது.
கால்டுவெல் திராவிட
மொழிகளின்
ஒப்பிலக்கணம் என்னும் புகழ்மிக்க நூலை வெளியிட்டதும் இந்தக்
காலக்கட்டத்தில்தான்.
மேற்சுட்டிய விவாதங்களின்
அடிப்படையில்,
பேச்சு
வழக்கிற்கும்
செந்தமிழ் வழக்கிற்கும் இடைப்பட்ட ஒரு நடையைப்
பின்பற்றுவது சரி என்று
விவிலிய மொழிபெயர்ப்பாளர்கள்
நினைத்தனர்; கூடிய வரை சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்ப்பது
எனவும் முடிவு செய்தனர். இது
தமிழ் உரைநடை
வளர்ச்சியில்
ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
தமிழ் உரைநடை
வரலாறும் விவிலிய
மொழிபெயர்ப்பு
வரலாறும்
ஒன்றோடொன்று
தொடர்புடையவை. விவிலிய
மொழிபெயர்ப்புகளில் காலந்தோறும்
பலவகையான
நடையியல்
மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. விவிலியத்தில் காணப்படும் ஒரு
வசனம் (லூக்கா 16:19) பல்வேறு
காலக்கட்டங்களில் எங்ஙனம்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
என்பதைப் பின்வரும்
சான்றுகள்
எடுத்துக்காட்டுகின்றன.
18ஆம் நூற்றாண்டு
அவர் செனங்களைப் பார்த்துக் கொண்டிருக்கச் செய்த
ஒரு பறுபதத்தின் பேரிலே ஏறிப்போனார்
(சீகன்பால்கு-1714)
|
19ஆம் நூற்றாண்டு
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்
(பவர் - 1864)
|
20ஆம் நூற்றாண்டு
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமேல் ஏறி அமர...
(பொது மொழிபெயர்ப்பு
- 1995)
|
|