தலைவி
உணவும் உறக்கமும் இன்றி, தலைவனை நினைத்து ஏங்கித் தவிக்கிறாள். இவ்வேளையில் குறத்தி
(சிங்கி) வருகிறாள். இடுப்பில் கூடையுடன், கையில் கோலுடன் அவள்
ஒய்யாரமாக நடந்து
வருகிறாள்.
என, குறத்தியின் வருகையைச் சாஸ்திரியார் பாடுகிறார். • நாடு, நகர், மலைவளம் சிங்கியின் வரவு கண்டு, தலைவி அவளை அழைத்து வருமாறு சொல்கிறாள். குறத்தி தன்னுடைய நாட்டுவளம், நகர் வளம், மலை வளம் ஆகியவற்றை நயம்பட எடுத்துக் கூறுகிறாள். அப்பொழுது விவிலியச் செய்திகளையும், இயேசுவின் சிறப்புகளையும், கிறித்தவர்களின் மேன்மைகளையும் குறத்தி பலவாறு எடுத்துரைக்கிறாள். தம் தலப் பெருமை பற்றிக் கூறும் குறத்தி பின்வருமாறு கூறுகிறாள். இப்பகுதியில் இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.
(நாசரேத்து = இயேசுவின் ஊர்; தலம் = ஊர்; தேசிகனார் = கிறிஸ்துவைக் குறித்து வருகிறது) மேலும் ஏசுவின் அருளால் நிகழ்ந்த அற்புதங்களைச் சுட்டிக் கூறுகிறாள். • குறத்தி குறி கூறல்
வணங்குகிறாள் குறத்தி. பின் குறி சொல்லத் தொடங்குகிறாள். ‘பெத்லகேம் நாதர் உன்னை மணம் கொள்ள நாளை வருவார்; சேலை வரும்; மாலை வரும்; சிலுவை முத்திரை மோதிரமும் வரும்’ என குறத்தி குறி சொல்கிறாள். இதனைக் கேட்ட தலைவி மகிழ்ச்சி அடைகிறாள். குறத்திக்குப் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பிவைக்கிறாள். • சிங்கன் வருகை சிங்கன் பெத்லகேம் நாதனைப் பாடிக் கொண்டே வருகிறான். பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை முதலிய பாச வலைகளில் சிக்கித் தவிக்கும் மக்களைச் சேர்க்கும் ‘ஞான வலை’ அவனிடம் இருக்கிறது. பறவை வேட்டையில் சிங்கனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சிங்கியின் நினைவு வருகிறது. குறத்தியைத்தேடி, சிங்கன் வருகிறான். பின்னர் சிங்கன் சிங்கியைக் கண்டுவிடுகிறான். அவர்களிடையே நிகழும் உரையாடல் சுவையாக அமைந்துள்ளது.
(பத்தி = பக்தி) இவ்வாறு இருவரும் உரையாடுகின்றனர். குறத்தி அணிந்துள்ள பல்வேறு அணிகலன்களையும் பார்த்து வியந்து சிங்கன் வினவுகிறாள். அதற்குச் சிங்கி நயமாகப் பதிலளிக்கிறாள். பின்னர் இருவரும் கடவுளைப் போற்றுகின்றனர், இறுதியில் வாழ்த்து அமைந்துள்ளது. |