4.3.2 இஸ்லாம் சமயம் | ||||||||||||
இஸ்லாம் சமயத்தை நிறுவியவர் முஹம்மது நபி நாயகம் (ஸல்) ஆவார். இவர் அறபு நாட்டில் கி.பி. 571ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இப்ராஹிம் நபியின் தலைமகனான இஸ்மாயில் நபியின் கிளையில் வந்தவர் ஆவார். மிகுராசு மாலையில் நபிகள் பெருமானாரின் வாழ்வியல் நிகழ்ச்சிகள் பலவற்றை ஆலிப்புலவர் குறிப்பிடுகின்றார்.
நபிகள் பெருமானாரின் துணைவியார் கதீஜா பிராட்டியார் ஆவார். இவர், குவைலீது என்னும் செல்வரின் மகள். மேலும் அவர் சிறந்த கொடை வள்ளலும் ஆவார். இதனை,
எனக் குறிப்பிடுகின்றார்.
நபிகள் பெருமானார் வாழ்வில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சிகள் சில மிகுராசு மாலையில் காட்டப்பட்டுள்ளன. அவைகளும் இங்குக் காணத்தக்கவை.
நபிகள் பெருமானார் இளமையில் கதீஜா பிராட்டியாரிடம் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவருடைய கூர்த்த மதியைக் கண்ட கதீஜா பிராட்டியார் அவரைச் சிரியா நாட்டிற்குச் சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவருக்கு ஓர் ஒட்டகமும் அதனை நடத்திச் செல்லப் பணியாளும் கொடுத்தார். ஆனால் அந்தப் பணியாள், ‘சிறிய நபிபிரானுக்கு இத்தனைச் சிறப்பா’ எனப் பொறாமை கொண்டான். ஊர் எல்லையைத் தாண்டி வணிகக் குழு வந்ததும் நபிபிரானை ஒட்டகத்தை விட்டு இறங்கி நடந்து வருமாறு செய்தான். ஏற்கெனவே அவருடைய தலைக்கு மேல் நிழலிட்டு வந்த மேகம் இன்னும் அகலப் பரவி நிழலிட்டது. இந்நிகழ்ச்சியை மிகுராசு மாலையார்.
என்றும்
என்றும் காட்டுகிறார்.
மக்கமா நகரத்தில் நபிகள் பெருமானார் பரப்பி வந்த ஓரிறைக் கோட்பாட்டை அவ்வூரார் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத எதிர்ப்பாளர்களுக்குத் தலைவராக அபுஜகில் என்பார் அமைந்தார். நபிகள் பெருமானாரைக் கொன்று விடக் கருதிய அபுஜகில் நபிபிரானிடம் ஊருக்கு வெளிப்புறம் உள்ள வெட்ட வெளிக்கு வந்தால், தான் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினான். நபிபிரானும் ஒப்புக் கொண்டு புறப்பட்டார். இருவரும் நடந்து பெரும் வனாந்தரத்திற்கு வந்தனர். அபுஜகில் தனக்குத் தாகம் எடுப்பதாகவும், இங்கு நீர்ச்சுனை ஒன்றைத் தோற்றுவித்தால் அத்தண்ணீரைக் குடித்தபின், தான் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினான். அவ்வளவில் நபிகள் பெருமானார் இறைவனின் திருநாமத்தை மனத்தில் நினைத்து கைநகத்தால் தரையைக் கீறினார். உடனே குபுகுபுவென்று இன்சுவை நீர் வெளிப்பட்டது. இதனை,
என மிகுராசு மாலையார் காட்டுகின்றார்.
டமாஸ்கஸ் நகரத்தை ஹபீப் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவ்வரசரின் அதிகார பலத்தைக் கொண்டு நபிபிரான் நவிலும் ஓரிறைக் கோட்பாட்டைக் கைவிடச் செய்துவிடலாம் என எதிரிகள் கருதினர். நல்லதொரு நாளில் ஹபீப் அரசரும் மக்காவிற்கு வந்தார். நபிபிரானை அழைத்து வருமாறு ஏவலர்கள் அனுப்பப்பட்டனர். ஏவலருடன் நபிபிரான் ஹபீபரசரின் முன்வந்தார். அவரைக் கண்டதும் ஹபீப் அரசரின் உள்ளத்தில் ஒருவித பக்திப் பெருவெள்ளம் பாய, தன்னையறியாமல் எழுந்து நின்று நபிபிரானை வரவேற்றார். இவர் இறையருள் பெற்ற நபி என ஹபீபரசரின் உள்ளுணர்வு கூறியது. ஆனால் அதனை மற்றவர்களுக்கும் உணர்த்த விரும்பினார். எனவே நபிகள் பெருமானிடம் கூறினார். ''அமாவாசை இரவில், நீங்கள் வானில் முழுமதியை வரவழைக்க வேண்டும். அது தன்னளவில் குறையாது வானில் எழுந்து பிரகாசிக்க வேண்டும். பின் அம்முழுமதி தரைக்கு இறங்கிக் காபாவை வலம் வந்து உயரே வானிற்குச் செல்ல வேண்டும். பின் உங்கள் விரல் அசைவால் அதனை இருதுண்டாகப் பிளவுபடுத்தி அவற்றைத் தனித்தனியே நிறுத்திக் காட்டிய பின்னர் ஒன்றாக இணைக்க வேண்டும்'' என்றார். நபிகள் பெருமானாரும் அதற்கு ஒப்புக் கொண்டு, எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அவ்வாறு நிகழ்த்திக் காட்டினார். இந்நிகழ்ச்சி மிகுராசு மாலையில்
என அமைந்துள்ளது. இவ்வகையில் மிகுராசுமாலையில் இஸ்லாம் சமயத்தை நிறுவிய நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. |