தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
2. | தமிழகத்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்கள் எவ்வகை ஒப்பாய்வுச் சிந்தனை வயப்பட்டு எழுச்சியுற்றனர்? |
இஸ்லாமிய நெறி தரும் பேறுகளான நாசூத்து, மலக்கூத்து, லாகூத்து, ஜபறூத்து என்பவற்றைச் சைவம் காட்டும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுஜ்ஜியம் என்பவற்றுடன் ஒப்பு நோக்கினர். சைவம் காட்டும் போதம் இஸ்லாமியம் காட்டும் இல்ம் (கல்வி ஞானம்) ஆகும். இவ்விரு நெறிகளையும் ஒப்பாய்வு செய்து சிந்தனை வயப்பட்டு எழுச்சி பெற்றனர். |