தன் மதிப்பீடு : விடைகள் - II

3. தமிழகத்து இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்கள் யோக நிலையை எவ்வகையில் கொள்கின்றனர்?

இறைவனிடம் தொடர்பு கொள்வதில் உள்ளம் முதலிடம் வகிக்கிறது. பொருள்களில் உள்ள உண்மைத் தன்மையை உணரும் உணர்வே உள்ளம், மெய்ஞ்ஞானத்தால் அது ஒளி பெற்றுவிட்டால் இறை உள்ளத்தின் பிம்பமாக விளங்கும். இதைப் பகுத்தறிவால் பெற முடியாது. தஜல்லி (ஞான ஒளி), இல்ஹாம் (தெய்வ வெளிப்பாடு) ஆகியவற்றின் மூலம் பெறும் அறிவே மாரிபத் எனப்படும். இதனை யோக நிலை (இர்ஃபான்) என்பர்.


முன்