6.0 பாட முன்னுரை |
இலக்கிய வரலாற்றை, பரப்பும் காலமும் நோக்கிப் பொருள் நோக்கிலோ கட்டமைப்பு நோக்கிலோ பாகுபாடு செய்து கொண்டு நோக்குவது மரபு. இத்தகைய மரபிற்கேற்ப இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இக்கால இலக்கியங்கள் என்னும் பிரிவில் அடங்கும் இலக்கியம் பற்றிப் பயில இருக்கின்றோம். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இக்காலத்திற்கு முற்பட்ட காலங்களைப் பற்றியும் அக்கால இலக்கியங்களைப் பற்றியும் சுருக்கமாகக் காண்போம். |