2.1 தமிழ்ச் சிறுகதையின் போக்குகள் முதலில் சிறுகதையின் போக்குகள் என்றால் என்ன என்பதை அறிதல் வேண்டும். சிறுகதைகள் தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலும் அவை பெற்றுள்ள வளர்ச்சிகளும், மாற்றங்களுமே அதன் போக்குகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை இலக்கியப்பயன், சமூகப்பயன் என்ற அடிப்படையில் அமைகின்றன. சிறுகதையின் போக்குகளுக்குச் சமூக மாற்றங்கள், நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு மாற்றங்கள், நவீன இலக்கிய வளர்ச்சி ஆகியவைகளும் காரணமாகின்றன. மேலும் படைப்பாளர்கள் தங்களின் ரசனைக்கு ஏற்பச் சிறுகதை இலக்கணத்தை வரையறுப்பதில் வேறுபடுவதாலும் சிறுகதையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வகையில் படைப்பாளர்களின் சிந்தனை வேறுபாடுகளைக் கீழ்க்காணும் வகையில் காண்போம்.
இங்ஙனம் படைப்பாளர்களின் சிந்தனை மாறுபாடுகளுக்கு ஏற்ப, சிறுகதையின் போக்குகள் அமைந்தன. |