இந்தப் பாடம்
தொடக்க காலச் சிறுகதைப் போக்கை,
வ.வே.சு.ஐயர், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் ஆகியோரின்
சிறுகதைகளின் வாயிலாக
வெளிப்படுத்துகிறது. மேலும்,
எழுபதுகளிலுள்ள சிறுகதைப் போக்கை
ஜெயகாந்தன்,
கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் ஆகியோரின் சிறுகதைகள்
வாயிலாக எடுத்துரைக்கிறது.
பின்பகுதியில் இன்றைய சிறுகதையின்
போக்கு, போக்கில்
நிகழ்ந்த மாற்றங்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.